பணம் சேர சித்ரா பௌர்ணமி வழிபாடு

murugan dheepam
- Advertisement -

நாளைய தினம் அதிசக்தி வாய்ந்த அற்புதமான சித்ரா பௌர்ணமி. இந்த தினத்தில் நாம் அனைத்து தெய்வங்களையும் வணங்கலாம். சில தினங்களில் தெய்வங்களின் சக்தி அதிகரித்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு நாள் தான் நாளைய தினம் சித்ரா பௌர்ணமி. அந்த நாளில் நாம் தெய்வங்களை வணங்கும் பொழுது அதிகப்படியான பலன்களை பெறலாம்.

அப்படி நாளைய தினத்தில் நாம் எந்தெந்த தெய்வங்களை வணங்கலாம். எப்படி வணங்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் நம் வீட்டின் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள செய்ய வேண்டிய எளிய ஒரு தீப வழிபாட்டு முறையைப் பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க சித்ரா பௌர்ணமி வழிபாடு

நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அம்மன் வழிபாடு மிகவும் சிறந்தது. உங்களுக்கு பிடித்த எந்த அம்மனாக இருந்தாலும் நாளைய தினம் வழிபாடு செய்யுங்கள். இத்துடன் அம்மன் ஆலயத்திற்கு சென்றும் தரிசனம் செய்யுங்கள். குறிப்பாக குலதெய்வ வழிபாட்டை நாளை தினம் செய்யும் பொழுது அதிகப்படியான பலனை பெறலாம்.

அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமையான நாளை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். நாளைய தினம் முருகரை நம் வழிபாடு செய்து இந்த தீபத்தை ஏற்றினால் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த தீப வழிபாட்டை நாளைய தினம் ராகு காலம் எமகண்டம் நேரத்தை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அங்கார காரனுக்கும் உகந்த தினம்.

- Advertisement -

இந்த அங்காரகாரகன் முருகன் இருவருக்கும் உகந்த தானியம் துவரம் பருப்பு.இந்த துவரையில் தான் நாம் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு பூஜை அறையில் ஒரு சிகப்பு நிற துணியை போட்டு அதன் மேல் கொஞ்சமாக துவரம் பருப்பை வைத்து விடுங்கள். இப்போது இந்த துவரம் பருப்பு மீது ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் நம்முடைய செல்வ வளத்தை பல மடங்கு அதிகரித்துக் கொடுக்கும்.

நாளை நம் வணங்க வேண்டிய இன்னொரு அதிமுக்கியமான தெய்வமான சித்திர குப்தனையும் நினைத்துக் கொள்ளுங்கள். சித்ரா பௌர்ணமி என்பது சித்திர குப்தன் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது. இந்த சித்ரகுப்தன் நம்முடைய பாவ புண்ணியங்களை கணக்கிட்டு சொல்பவர். முருகப்பெருமான் நம்முடைய கர்மாக்களை அழிக்கும் சக்தி கொண்டவர்.

- Advertisement -

நாளைய தினம் முருகப்பெருமானை நினைத்து இந்த தீப வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் குறைய வேண்டும் என்று சித்திரகுப்தனையும் மனதார நினைத்துக் கொண்டு வேண்டுங்கள். நிச்சயம் நம்முடைய கர்மாக்கள் குறையும். அது மட்டும் இன்றி நாம் ஏற்றக் கூடிய இந்த தெய்வம் நம்முடைய வீட்டில் செல்வ நிலையை அதிகரித்துக் கொடுக்கும் அதற்கான அருளை முருகப்பெருமான் நிச்சயம் வழங்குவார்.

இவையெல்லாம் செய்வதோடு நாளைய தினத்தில் பௌர்ணமி இருப்பதால் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பிறகு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும். இது நம்முடைய மனக்குறைகள் அனைத்தையும் தீர்த்து நல்ல முறையில் வாழ்வதற்கான யோகத்தை வழங்கும். இத்துடன் நாளைய தினம் உங்களால் முடிந்த அளவிற்கு யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சிவன் அருளைப் பெற கிரிவலம்

நாளைய தினம் செய்யக் கூடிய இந்த வழிப்பாடும், ஏற்றக்கூடிய தீபமும் நம்முடைய பாவங்ககளை குறைப்பதோடு, நம் வாழ்க்கையில் செல்வ நலனை அதிகப்படுத்தி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் இப்படி வழிபாடு செய்து அதற்கான பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -