வாழவே விடாமல் பாடாய் படுத்தும் ஏழு ஜென்ம பாவங்களும் தொலைந்து போக ஒரு கைப்பிடி அரிசியை இப்படி பயன்படுத்தினால் போதும். விடாமல் துரத்தும் ஜென்ம பாவம் தீர எளிய பரிகாரம்.

- Advertisement -

ஒரு மனிதனின் இந்த ஜென்மத்து பிறப்பே அவனுடைய பூர்வ ஜென்மத்தின் கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. நாம் வாழும் இந்த வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து விடுகிறோம். ஒரு சில பாவங்கள் ஏழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும் என்று சொல்லப்படுகிறது இந்த ஜென்ம பாவத்தை தொலைக்க நம்முடைய இந்து தர்ம சாஸ்திரம் நமக்கு அருமையான ஒரு எளிய பரிகாரத்தை தந்திருக்கிறது. அதைப் பற்றி தான் இப்பொழுது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஏழு ஜென்ம பாவங்களும் தொலைந்து போக எளிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரே ஒரு கைப்பிடி பச்சரிசி மட்டுமே. இதை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த பரிகாரத்தை சனிக் கிழமைகளில் தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பொடித்த இந்த அரிசியை கையில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு வெளியில் நின்று சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். இந்த விநாயகர் மரத்தடியில் இருக்கும் விநாயகராக இருக்கலாம் அல்லது ஆலயத்தில் இருப்பவராகவும் இருக்கலாம்.

- Advertisement -

இந்த விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது இந்த அரிசி பொடியை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விநாயகரை சுற்றி தூவிக் கொண்டே வர வேண்டும். இப்படி நீங்கள் தூவியை இந்த அரிசியை எடுக்க எறும்புகள் வரும். எந்த அளவிற்கு எறும்புகள் இந்த அரிசியை எடுத்து செல்கிறதோ அந்த அளவிற்கு உங்களுடைய பாவங்கள் படிப்படியாக குறையும் என்பது ஐதீகம். இப்படி எடுத்துச் செல்லும் அரிசியை எறும்புகள் உடனடியாக உண்டு விடாது. அவை மழைக்காலத்திற்கு இதை சேர்த்து வைத்துக் கொள்ளும்.

எறும்புகளின் எச்சில் பட்ட உடனே இந்த அரிசி கெட்டுப் போகும் தன்மையை இழந்து விடும். இது இரண்டே கால் ஆண்டு வரை அவைகள் கெடாமல் இதை பாதுகாத்து வைத்துக் கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலைகள் மாறும். அப்போது தான் இந்த அரிசியும் அதன் தன்மையை இழக்கும். இதனால் தான் எறும்புகளுக்கு அடிக்கடி பச்சரிசியை தானம் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

இதே காரணத்தினால் தான் நம் முன்னோர்கள் வீட்டு வாயிலில் பச்சரிசி மாவில் கோலம் போடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். இப்படி நாம் கையால் போடும் இந்த அரிசியை எறும்புகள் உண்ணும் போது நம்முடைய பாவங்கள் அனைத்தும் குறையும் என்பதை நம் சாஸ்திரங்கள் ஆணித்தரமாக நம்புகிறது.

இந்த தானம் நம் பாவத்தை மட்டும் தீர்ப்பது கிடையாது ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி போன்ற சனி தோஷ பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்தும் கூட நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஒரு கைப்பிடி பச்சரிசி நம்முடைய ஏழு ஜென்ம பாவத்தையும் நீக்கி வாழ வைக்கும் என்றால் அடிக்கடி நாம் செய்து வரும் பொழுது நம் உடைய கர்ம வினைகள் அனைத்தையும் இந்த ஜென்மத்திலே தொலைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: தானம் செய்யும் அளவிற்கு உங்களிடம் செல்வம் இல்லையா? வசதி படைத்தவர்கள் செய்யும் தானத்திற்கு சமமாக அதே பலனை தரக்கூடிய மிக எளிமையான தானத்தை இப்படி செய்து வாழ்வில் வளர்ச்சி பெறலாம்.

நம்மால் முடிந்த வரையில் வாழும் இந்த வாழ்க்கையில் யாருக்கும் எந்தவித துன்பத்தையும் தராமல் நம்முடைய சுயலாபத்திற்காக அடுத்தவரை துன்புறுத்தாமல் நல்ல முறையில் வாழ்வதே நம் வினைகளிலிருந்து முற்றிலுமாக தப்பிப்பதற்கு சுலபமான வழி என்று எந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -