கர்மா குறைய செல்ல வேண்டிய கோவில்

chitra kubtar alayam
- Advertisement -

மனிதனுடைய ஒவ்வொரு நாளையும் தீர்மானிப்பது கிரகங்களும் கர்மாக்களும் தான். இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பமும் நம்முடைய கர்மாக்களின் பலன் தான். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அப்படி இருக்கையில் இந்த பிறவியில் நாம் செய்யக் கூடிய பாவம்தின் பலனை நிச்சயம் நம்முடைய மறுபிறவியில் அனுபவிப்போம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

பாவங்கள் செய்யாத மனிதர்களே இருக்க முடியாது. தவறு செய்வது மனித இயல்பு தான். இந்த தவறை திருத்திக் கொண்டு நல்ல முறையில் வாழ்வதற்காகத் தான் ஆன்மீகம் பல வழிமுறைகளை நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. அந்த வகையில் நம்முடைய பாவங்கள் கறைய வழிபாடு முறைகளும் அனேகமாக உள்ளது.

- Advertisement -

அதில் குறிப்பாக இந்த ஆலயத்திற்கு சென்று இப்படி வழிபாடு செய்யும் போது நம்முடைய பாவங்கள் குறையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது என்ன ஆலயம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பாவங்கள் குறைய வழிபாடு

இந்த வழிபாடு செய்ய வேண்டிய கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் ஆலயம் தான். தென்னிந்தியாவிலே சித்திரகுப்தற்கென இந்த ஒரு ஆலயம் தான் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த பூமியில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கெடுத்து கொடுக்கும் மிகப்பெரிய பணியை செய்பவர் சித்திரகுப்தர்.

- Advertisement -

இந்த சித்ரா குப்தர் நவகிரகங்களில் உள்ள ராகு கேது பகவானுக்கு அதி தேவதையாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது. அது மட்டும் இன்றி ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. ஆகையால் நாம் செய்த பாவங்களை தீர்க்க சொல்லி முறையிட கூடிய தெய்வமும் இவர் தான் என்று சொல்லப்படுகிறது.

இவருடைய ஆலயத்திற்கு சென்று இவருக்கு அர்ச்சனை அபிஷேகங்கள் செய்த பிறகு உளுந்தை படைக்க வேண்டும். உளுந்தினாலான பண்டங்கள் அல்லது உளுந்து வடை இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து சித்திரகுப்தற்கு படைத்து அதை பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும் இது தான் பரிகாரம். இப்படி நாம் செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் அதாவது தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் தீர்ந்து புண்ணியங்கள் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்காலமே: நில பிரச்சினை நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

இதுவரை தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை இப்படி வழிபாட்டின் மூலம் சரி செய்வதோடு இனி வாழும் வாழ்க்கையில் எந்தவித பாவக்காரியங்களும் செய்யாமல் யாருடைய கண்ணீருக்கும் ஆளாகாமல் நல்ல முறையில் நம்முடைய வாழ்க்கையை வாழ பழகி கொள்ளலாம் என்று இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -