அட வெள்ளை ஷூ சாக்ஸை துவைக்கிறது இவ்வளவு சுலபமா! அப்ப இனி கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே இல்ல. அந்த சூப்பர் ஐடியாவை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

- Advertisement -

பொதுவாக பெண்களுக்கு உள்ள மிகப் பெரிய டென்ஷனே பிள்ளைகளோட ஸ்கூல் ஷூ, சாக்ஸை துவைக்கிறது தான். அதுல இருக்க கறையை எப்படி துவைச்சாலும் போகவே போகாது. இதை மிஷின்லையும் போட முடியாது கையில தான் துவைச்சாகணும். இந்த கறையை எப்படி சுலபமா நீக்கிறது அப்படிங்கறது மட்டுமில்லாமல், இன்னும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் பள்ளி குழந்தைகளின் ஷூ சாக்ஸை எப்படி கை வலிக்காமல் சுலபமாக துவைப்பது என்று பார்த்து விடலாம். அதற்கு ஒரு பௌலில் கொஞ்சம் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் பயன்படுத்தும் துணி பவுடரை ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் கால் டீஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரில் ஷூ சாக்ஸை முக்கி வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து தண்ணீரும் ஒரளவிற்கு அளவிற்கு சூடு ஆறிருக்கும். சாக்ஸை எடுத்து லேசாக கசக்கினாலே போதும் தனியாக பிரஷ் போட்டு தேய்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சாக்ஸ் பளிச் சென்று மாறி விடும் அதே போல் ஷூவையும் லேசாக பிரஸ் வைத்து தேய்த்தாலே போதும் அதுவும் வெள்ளையாக மாறி விடும். இந்த குறிப்பை வெள்ளை நிற ஷூ சாக்ஸுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் புளியை விலை குறைவாக இருக்கும் போது அதிகமாகவே வாங்கி சேமித்து வைத்துக் கொள்வோம். அப்படி வைக்கும் போது அதை என்ன தான் பத்திரப்படுத்தி வைத்தாலும் அதில் இந்த பறக்கும் பூச்சிகள் வந்து அடைந்து விடும். இதனால் புளியில் சீக்கிரம் வாடை வந்து விடும். நமக்கும் எடுத்துச் செய்ய ஒரு மாதிரியாக இருக்கும். இனி புளியை எடுத்து வைக்கும் போது அதில் கொஞ்சம் கிராம்பை போட்டு வைத்து விடுங்கள். இந்த வாடைக்கு அந்த பறக்கும் பூச்சிகள் கிட்ட கூட வராது.

- Advertisement -

அதே போல் இட்லி தட்டில் துணி போட்டு ஊற்றினால் இட்லியை எடுத்த பிறகு அடி தட்டு இட்லி தண்ணீர் கோர்த்தது போல இருக்கும். இனி அப்படி ஆகாமல் இருக்க ஒரு அகலமான தட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து அந்த தண்ணீரின் மேல் இந்த இட்லி தட்டை வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்தால் இட்லி ஒட்டாமலும், பிசுபிசுப்பு இல்லாமலும் நன்றாக இருக்கும்.

நம் வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடியில் கறைகள் படிந்து இருந்தாலோ அல்லது பிசுபிசுப்பு தன்மை இருந்தாலோ கொஞ்சம் ஹேண்ட் வாஷைசை டிஷ்யூ பேப்பரில் சேர்த்து நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காட்டன் துணி வைத்து துடைத்து விட்டால் கண்ணாடி பளபளப்பாக மாறி விடும்.

- Advertisement -

சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சின்ன கண்ணாடிகள் கீழே விழுந்து அதன் ஓரங்களில் மட்டும் உடைந்து விடும். கண்ணாடி உடையாமல் நன்றாக இருக்கும் இது போன்ற சமயங்களில் கண்ணாடியை தூக்கி போடாமல் ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பாக்ஸின் (ஸ்வீட் பாக்ஸ் போல) மூடியில் இந்த கண்ணாடி ஒட்டி விடுங்கள்.

நீங்கள் வெளியூர் செல்லும் போதோ அல்லது திருமணம் போன்ற விசேஷங்கள் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலோ இந்த பாக்ஸில் உங்களின் பொட்டு, சீப்பு, பவுடர் போன்றவற்றை வைத்து எடுத்து சென்றால், ஒரே பாக்ஸில் கண்ணாடியில் இருந்து அழகு பொருட்கள் எல்லாம் ஒன்றாக வைத்தது போலவும் இருக்கும் உங்களுக்கு உபயோகிக்கவும் எளிமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா தெரியாம இத்தனை நாள் மண்ட காஞ்சு போச்சு. கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட இவ்வளவு ஈசி டிப்ஸா?

இந்த பதிவில் உள்ள குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு உதவியாக மிகவும் இருக்கும். நீங்களும் இந்த குறிப்புக்களை பயன்படுத்தி உங்களின் தினசரி வேலையை எளிமையாக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -