இந்த ஐடியா தெரியாம இத்தனை நாள் மண்ட காஞ்சு போச்சு. கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட இவ்வளவு ஈசி டிப்ஸா?

kitchen-cockroach
- Advertisement -

கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, ஈ, கொசு இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். கடைகளில் இருந்து கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது. குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் ஹிட், பூச்சிக்கொல்லி மருந்தை எல்லாம் அவ்வளவு எளிதாக நம்மால் பயன்படுத்த முடியாது. அப்படி இருக்கும்போது மிக மிக எளிமையான முறையில் குறைந்த செலவில் கரப்பான் பூச்சி, ஈ, கொசு, எறும்பு இவைகளில் இருந்து தப்பிக்க ஒரு ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குறிப்பு படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். பலன் தெரிந்தால் தொடர்ந்து பயன்படுத்துங்கள். இதோ உங்களுக்கான அந்த பயனுள்ள எளிய வீட்டு குறிப்பு.

பல்லி கரப்பான் பூச்சி வராமல் இருக்க லிக்விட் தயார் செய்யும் முறை:
இதற்கு முதலில் ஏதாவது ஒரு மாத்திரை நமக்குத் தேவை. வீட்டில் காய்ச்சல், சளி, இருமல், இவைகளுக்கு மாத்திரை போடுவோம் அல்லவா அதில் ஏதாவது ஒரு பழைய மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு குரோசின், பேராசிட்டமல் எது இருந்தாலும் சரி, ஒரு மாத்திரையை எடுத்து ஒரு பேப்பரில் வைத்து நசுக்கி தூள் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் நசுக்கிய மாத்திரை – 1, டெட்டால் – 1 மூடி, காபித்தூள் – 2 சிட்டிகை, தண்ணீர் – 2 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்தால் ஒரு லிக்விட் நமக்கு கிடைக்கும். ரொம்ப கொஞ்சமாகத்தான் இந்த லிக்விட் நமக்கு கிடைக்கும் தேவைப்பட்டால் கூட இரண்டு ஸ்பூன் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடில் சின்ன சின்ன காட்டன் பால், அதாவது பஞ்சை நனைத்து அந்த பஞ்சினை கரப்பான் பூச்சி பல்லி வயக்கக்கூடிய இடத்தில் எல்லாம் வைத்து விட்டால் இந்த வாசத்திற்கு கரப்பான் பூச்சி, பல்லி, வரவே வராது. ஈ கொசு எறும்புகள் தொல்லை கூட குறையும். இதை சிங்குக்கு அடியில், கபோர்டுக்கு உள்பக்கத்தில் எல்லாம் கூட வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பீரோவுக்கு அடியில் வையுங்கள் பல்லிகள் வராது.

உங்களுடைய வீட்டில் பஞ்சு இல்லை என்றால் சின்ன சின்ன காட்டன் துணியில் நனைத்தும் இந்த லிக்விடை நீங்கள் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் இதை ஒரு சின்ன ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, இந்த ஸ்பிரேவை உங்களுக்கு தேவையான இடங்களில் அடித்துக் கொள்ளலாம். சிங்குக்கு அடியில், பாத்ரூம் தண்ணீர் போகக்கூடிய இடத்தில், வாஷ்பேசனுக்கு அடியில் கபோர்டுக்கு அடியில், என்று எல்லா இடத்திலும் இந்த பிரேவை அடித்துவிட்டால் கரப்பான் பூச்சி பல்லி தொல்லை குறையும்.

- Advertisement -

இதே ஸ்ப்ரேவை ஜன்னல் வலைகளில் அடித்து விட்டால் கூட, அந்த ஜன்னல் வலையில் ஒட்டி இருக்கும் கொசு முட்டையால் உண்டாக்கப்படும் கிருமிகள் எல்லாம் அழிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மீண்டும் கொசுக்கள் அந்த வலையின் மீது அமர்ந்து முட்டை வைக்காமல் இருக்கும். வலை அசுத்தம் ஆகாமலும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நீங்க போட்டிருக்கும் தங்க நகை, கவரிங் நகை போல கருத்து போய் விட்டதா? அவைகளை 1 நிமிடத்தில் கைப்படாமல் புதுசு போல பளபளப்பாக மாற்ற இதோ ஒரு சூப்பரான ஐடியா.

சிங்குக்கு அடியில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்குதா. அந்த இடத்தில் குப்பை கூடையை வைக்காதீங்க. காய்கறி குப்பைகள் பழ வகைகள் வாசம் வரக்கூடிய எந்த குப்பையையும் சிங்குக்கு அடியில் வைக்கவே கூடாது. சிக்குக்கு அடியில் சுத்தமாக இருந்தால் கரப்பான் பூச்சி தொல்லை சமையல் அறையில் குறையும். குறிப்பா இரவு நேரத்தில் சிங்க் சுத்தமாக இருக்க வேண்டும். அதேசமயம் சிங்குக்கு உள்ளே பத்துபாத்திரங்களை அப்படியே போட்டு வைக்காமல் அடிக்கடி சுத்தம் செய்துவிட்டு, சிங் ஓட்டைக்குள் இறுதியாக சோடா உப்பு போட்டு, சுட சுட வெந்நீரை ஊற்றி விடுங்கள். உங்கள் வீட்டு சமையலறையும் சிங்கும் கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து தப்பிக்கும். மேல் சொன்ன குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -