இனி உங்க குட்டிஸ் தங்க நகை தொலையறதுக்கு வாய்ப்பே இல்லங்க. வெளிய போகும் போது கூட பயப்படாம போடலாம். அதுக்கும் சூப்பர் ஐடியா இருக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

சமையலறை முதல் நீங்கள் வெளியில் செல்லும் வரை நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய சில குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது. இவை அனைத்துமே நாம் தினந்தினம் பயன்படுத்தும் பொருட்களாகட்டும், செய்யும் வேலைளாகட்டும், இரண்டிற்கும் இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். அது என்னென்ன குறிப்புகள் என்று பதிவு தொடர்ந்து பார்க்கலாம்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது அவர்களுடைய நகைகளை அவர்களுக்கு போட்டு அழைத்துச் செல்லவே முடியாது. ஆசை ஆசையாக வாங்கிய நகைகளை போட முடியாமல்வைத்திருப்போம். குழந்தைகளுக்கு நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள தெரியாது. இனி அப்படி பயப்படவே தேவையில்லை. அதற்கு ஒரு எளிய குறிப்பு உள்ளது. இனி எங்காவது வெளியில் செல்லும் போது கழுத்தில் நகை அணிந்த உடன் கொக்கி மாட்டும் இடத்தில் கொஞ்சமாக சேலோ டேப் ஒட்டி விட்டால், நீங்களாக எடுத்தால் ஒழிய நகையை கழுத்தில் இருந்து கழற்ற முடியாது. கழண்டு விழும் என்கிற பயமும் கிடையாது.

- Advertisement -

பல பேர் வீடுகளில் செய்யும் மிகப் பெரிய தவறு நாம் ஏதாவது பொருள் வாங்கி ஒரு டப்பாவில் வைத்து விட்டால் அதை மறந்து விடுவோம். சில பொருட்களை நாம் அடிக்கடி செய்ய மாட்டோம் அது போன்ற பொருள்களை நீங்கள் வைக்கும் போது பல நேரங்களில் எக்ஸ்பைரி ஆன பின்பு கூட அந்த பொருள் அப்படியே இருக்கும். அதை கவனிக்காமல் செய்து நம் உடல்நிலை கெட்டுப் போகும் வாய்ப்பு அதிகம். இதை தவிர்க்க எந்த பொருளை பாக்ஸில் கொட்டுவதாக இருந்தாலும் அதன் எக்ஸ்பைரி டேட்டை எடுத்து அதே டப்பாவில் மேலே ஒட்டி விடுங்கள். அடிக்கடி காலியாகும் பொருட்கள் பற்றி கவலை இல்லை. ஆனால் வைத்து செய்யும் பொருள்களில் இது போல குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

அப்பளம் பொரிக்க நாம் பெரிய சட்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொரித்து விடுவோம். அதன் பிறகு அந்த எண்ணெய் கருப்பாகி அடுத்த சமையலில் சேர்க்கும் போது அது அவ்வளவு சுவையாக இருக்காது. அதற்கு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அப்பளங்களை ஒன்று இரண்டாக உடைத்து போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் செலவும் மிச்சமாகும். பொறித்த எண்ணெய் மறுபடியும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அதனால் உடலுக்கும் நல்லது.

- Advertisement -

டாப் லோட் வாஷிங் மெஷின் துணி துவைக்கும் போது, துவைத்து முடித்தவுடன் துணிகளை எடுக்க மிகவும் கடினமாக இருக்கும். துணிகள் ஒன்றோடு ஒன்று சுற்றிக் கொண்டு எடுக்க முடியாது இதை சமாளிக்க துணி போடும் போது ஒரு வாட்டர் பாட்டில் முழுவதுமாக தண்ணீர் நிரப்பி மூடி துணிகளுக்கு இடையில் வைத்த பிறகு மெஷினை போட்டு விடுங்கள். இதன் மூலம் துணிகள் ஒற்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாதவாறு இடையில் இருக்கும் இந்த வாட்டர் பாட்டில் பார்த்துக் கொள்ளும். இதில் இன்னொரு ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்ன என்றால் இந்த வாட்டர் பாட்டில் துணிகளுடன் சேர்ந்து அடித்து சுற்றிக் கொண்டிருக்கும் போது துணிகளில் இருக்கும் அழுக்குகள் கூட சுத்தமாக நீங்கி விடும்.

ஒரே குறிப்பில் இரண்டு வேலைகளை சுலபமாக செய்து கொள்ளலாம் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால் உங்களின் அன்றாட பணிகளை டென்ஷன் இல்லாமல் செய்யலாம்

- Advertisement -