- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமழைக்கால பெடிக்யூர்

மழைக்கால பெடிக்யூர்

- Advertisement -

மழைக்காலங்களில் சருமத்தையும் பாதங்களையும் பராமரிப்பது தான் நமக்கு சவாலாக இருக்கும். பாதங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பூஞ்சை தொற்று ஏற்படும். இதனால் எரிச்சல், தடிப்பு, சிவத்தல், பாத வெடிப்புகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இது போன்ற சமயங்களில் எளிய முறையில் வீட்டிலேயே எப்படி பாதங்களை பராமரிப்பு செய்வது? இந்த அழகு குறிப்பு தகவலை தெரிந்து கொண்டால், இதற்காக பெடிக்யூர் என்று பல ஆயிரம் ரூபாயை இனி செலவு செய்ய வேண்டியது இல்லை.

பாதங்களில் வெடிப்புகள், பூஞ்சை தொற்று அல்லது சேற்றுப்புண், எரிச்சல், வலி போன்ற எந்த தொந்தரவுகள் இருந்தாலும், முதலில் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு பாதங்களை சோப்பு போட்டு கழுவி கொள்ளுங்கள். பின்னர் அரிசி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி களைந்த தண்ணீர் இல்லையென்றால், அதற்கு பதிலாக சாதாரண தண்ணீரை வெதுவெதுப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். கால் பொறுக்கும் சூட்டில் தண்ணீரை சூடு படுத்தி கொள்ள வேண்டும். அதை வாயகன்ற பாத்திரத்தில் சேருங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் ஏதாவது ஒரு அரோமா எண்ணெயை இரண்டு சொட்டு அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரோமா எண்ணெய் என்பது ஓமம், கிராம்பு, பட்டை, புதினா, பெப்பர்மின்ட், டீ ட்ரீ ஆயில், யூகலிப்டஸ், லெமன் கிராஸ், ஒரிகானோ போன்ற பல வகையான பொருட்களைக் கொண்டு தனித்தனியாக தயார் செய்யப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். அரோமா எண்ணெய் வகைகளில் ஆன்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை கொல்லி போன்றவை அதிகம் இருப்பதால், சரும நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியதாக விளங்குகிறது.

இதில் உங்களுக்கு பிடித்த நறுமணம் உள்ள எண்ணெயை இரண்டு சொட்டு அளவிற்கு சேர்த்து, அதனுடன் கொஞ்சம் கல் உப்பு போட்டு கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சை, ஒரு டீஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் இந்த தண்ணீரில் 15 லிருந்து 20 நிமிடம் வரை உங்களுடைய பாதங்களை அமிழ்த்தி வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே வாரம் ஒரு முறை நீங்கள் கல் உப்பு சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில், சாதாரணமாக கால்களை அமிழ்த்தி வைத்திருந்தாலே குதிகால் வலிகள், பாத எரிச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்காது.

- Advertisement -

ஸ்பெஷலாக இது போல எண்ணெய்கள் பயன்படுத்தி செய்யும் பொழுது பார்லர்களில் பல ஆயிரம் செலவு செய்து செய்யப்படும் பெடிக்யூர் போல நல்ல ரிசல்ட் கிடைக்கும். கால்களை வெளியில் எடுத்த பின்பு ஸ்கிரப்பர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கொடுத்தால், இறந்த செல்கள் நீங்கி பாதங்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். ஆனால் வெடிப்புகள் இருக்கும் இடங்களில் இது போல ஸ்கிரப்பர் பயன்படுத்த வேண்டாம். மென்மையான துணியை பயன்படுத்தி ஒற்றி எடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பெருமாள் மாவிளக்கு வழிபாடு

பிறகு மாய்ஸ்சுரைசிங் கிரீம் உடன் ஒரு சொட்டு அரோமா எண்ணெய் சேர்த்து கலந்து கால்களில், பாதங்களில் மென்மையாக மசாஜ் செய்து பூசி விடுங்கள். அப்படி இல்லையென்றால் சாதாரண தேங்காய் எண்ணெய் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்தால் பாதங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், மழைக்காலங்களில் வரக்கூடிய தொந்தரவுகள் நீங்கி உங்களுடைய பாதங்கள் ரோஜா பூ போல மென்மையாக பளிச்சென்று இருக்கும்.

சற்று முன்