ஒருபோதும் இப்படி மட்டும் இருந்து விடாதீர்கள்! உங்களிடம் முகராசி இல்லை என்றால் நடப்பதெல்லாம் பீடை பிடித்தது போல் ஆகிவிடும்!

sad-lakshmi

ஒருவருக்கு நல்ல காலம் வருவதற்கு கூட முகராசி வேண்டும் என்பார்கள். ‘அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் முகத்தில் பிரகாசமாக பிரதிபலிக்கும். சிலர் எளிமையாக இருந்தாலும் அவர்களுடைய முகத்தில் இருக்கும் பிரகாசம் கை கூப்பி நம்மை வணங்கச் செய்து விடும். அதைத்தான் முகராசி என்பார்கள். ஒருவர் செய்யும் தொழில் நல்ல வளர்ச்சியை காண்பதற்கு கட்டாயம் முகராசி வேண்டும். முகராசி இல்லை என்றால் எதையுமே சாதிக்க முடியாது.

gajalakshmi

முகராசி என்பது மகாலட்சுமி கடாட்சத்தை குறிக்கிறது. நம் முகத்தில் தெரியும் தேஜஸ் நாம் செய்யும் செயல்களிலும் பிரதிபலிக்கிறது. அதனால் தான் ஒரு வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் என்கிறார்கள். அழுத முகத்துடன் இருந்தால் லக்ஷ்மியும் வெளியே சென்று விடுவாள். எவ்வளவு கஷ்டங்கள் வாழ்க்கையில் வந்தாலும் முகத்தில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யாமல் சோகத்தை முகத்தில் கொண்டு வந்தால் பீடை பிடித்தது போல் ஆகிவிடும். அதைப்பற்றிய விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

கைராசி, முகராசி இந்த இரண்டுமே ஒருவருக்கு இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் என்ன தான் துர்பாக்கிய நிலையில் இருந்தாலும் அதனை முகத்தில் கொண்டு வந்து காட்டக் கூடாது என்பது தான் சொல்ல வருகிறோம். உதாரணத்திற்கு ஒரு சிலர் எல்லாம் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ‘நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லை! இந்த ஜென்மத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறேன், அப்படி எல்லாம் துன்பப்படுகிறேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?’ என்று எதிர்மறையான எண்ணங்களை முகத்தில் வெளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களிடம் தரித்திரமும், பீடையும் தான் தங்கும்.

sad-crying4

பெரும்பாலான ஆலயங்கள் பிரதிபலிப்பது என்ன தெரியுமா? நாம் அங்கு செல்லும் பொழுது என்ன மனநிலையில் செல்கிறோம்? எப்படி செல்கிறோம்? என்பதைப் பொறுத்து தான் பலன்களும் கிடைக்கும். நல்ல எண்ணத்தோடும், நல்ல தோற்றத்துடன் நீங்கள் சென்றால் எண்ணிய செயலும் அப்படியே நடக்கும். பீடை பிடித்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு, நல்ல துணி மணிகள் கூட உடுத்தாமல் கோவிலுக்கு சென்று நீங்கள் அழுது புலம்பினாலும் பலனே கிடைக்காது. தெய்வ அருள் கிடைப்பதற்கு கூட முகராசி வேண்டும்.

- Advertisement -

நல்ல சுத்தமான ஆடைகள் உடுத்தி, உங்களிடமிருக்கும் நகைகள் எல்லாம் அணிந்து கொண்டு மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் புன்னகை பூத்த முகத்துடன் சென்று இறைவனிடம் மன்றாடினால் நீங்கள் கேட்டது அப்படியே கிடைக்கும். உங்களிடம் என்ன இருக்கிறதோ! அதைத்தான் திரும்பத் திரும்ப இறைவன் கொடுப்பார் என்ற ஒரு நியதி இருக்கிறது. அதனால் தான் பணம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

sivan-temple

எதிர்மறை எண்ணத்துடன் ஒருபோதும் ஒருவரிடம் பேசி விடாதீர்கள். ‘எனக்கு என்ன கவலை? நான் ராஜாவாக வாழ்கிறேன்’ என்கிற கம்பீர பேச்சை பொன் மொழிகளாக வார்த்தையில் உதிர்த்தால்! முகத்தில் ராசியும் தானாகவே வந்துவிடும். அப்புறம் என்னங்க! நீங்களும் முகராசிக்கு பெயர் போனவர்கள் தான் என்கிற பட்டியலில் இடம் பிடித்து விடலாம். சிலரது முகத்தைப் பார்த்து விட்டு சென்றாலே, அப்படி ஒரு அதிர்ஷ்டமான நாளாக மாறிவிடும். அப்படியான ஒரு முகராசியை பெறுவதற்கு முதலில். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் எப்பொழுதும் புன்னகையை புரிந்து கொண்டே இருங்கள். பீடை பிடித்த அந்த முகத்திரையைக் கிழித்து எறியுங்கள். உங்களுக்கும் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
காலத்தில் பலன் தரும் பைரவருக்கு வீட்டிலேயே இப்படி பூஜை செய்வதால் நன்மைகள் கிடைக்குமா? வீட்டில் பூஜை செய்வது சரியா? தவறா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.