ஒரே வாரத்தில் உங்கள் தலையில் இருக்கும் பேன், ஈறு, பொடுகு, தொல்லை நீங்க நச்சுன்னு 4 எளிய குறிப்புகள் இதோ உங்களுக்காக.

peen
- Advertisement -

தலையில் ஈறு, பேன், பொடுகு, இந்த பிரச்சனை இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானருக்கு இருக்கிறது. இதனால் படிக்கும் பிள்ளைகளுக்கு தான் பெரிதும் பாதிப்பு. இது எப்போதும் தலையில் ஒருவித அரிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அவர்களால் முழு கவனத்துடன் படிக்க முடியாது. பெரியவர்களும் கூட பொது இடங்களில் இது போன்று அரிப்பு ஏற்பட்டால், தலையை சொரிந்து கொண்டே இருப்பது அவர்களுக்கும் கூட சற்று சங்கோஜமாகத்தான் இருக்கும். தலையில் ஈறு, பேன், பொடுகு, போன்றவை எல்லாம் வந்துவிட்டால், அதை சரி செய்ய நாம் படாத பாடு பட வேண்டி இருக்கும்.

பெரும்பாலும் இந்த பேன், வாசனை மிக்க பூக்கள், ஷாம்பூ, ஹேர் ஸ்பிரே போன்ற பொருட்களினால் நாம் உபயோகிப்பதால் தான் பெருமளவில் வருகிறது. அடுத்து நாம் ஏதாவது உறவினர்கள், வீட்டிகளிலோ அல்லது விஷேச வீடுகளிலோ தங்கும் போது அவர்கள் மூலமாகவும் இந்த பேன் நம் தலைக்கு வந்து விடுகிறது.

- Advertisement -

அதற்காக பூ வைக்காமலும், யார் வீட்டிற்கும், போகாமலும் இருக்க முடியுமா? பிறகு என்ன தான் செய்வது, ஒன்றும் இல்லை. வாரம் இருமுறை கட்டாயம் பேன் சீப் போட்டு வார வேண்டும். வாரம் இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் தலையில் அழுக்கும் சேராது. சரி இதெல்லாம் வருவதற்கு முன், வந்த பிறகு என்ன செய்வது. என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ரொம்பவும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வடிகட்டியில் வேப்பிலையை வடித்து, சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை உங்கள் தலைமுடி வேர்கால்களில் படும் படியாக தேய்த்து விடுங்கள். அதன் பிறகு ஒரு 20 நிமிடம் வரை இது உங்கள் தலையில் அப்படியே இருக்கட்டும். பிறகு நீங்கள் எப்போதும் போல் உங்கள் தலைக்கு ஷாம்பு, சீயக்காய் எது வேண்டுமானாலும் தேய்த்து குளித்து விடுங்கள்.

- Advertisement -

இரண்டாவது டிப்ஸ். ஒரு அரை மூடி அளவிற்கு தேங்காய் எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு பத்து மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக அரைத்து இதையும் வடிக்கட்டியில் வடித்து சாறு எடுத்து கொள்ளுங்கள். இதை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இதையும் 20 நிமிடம் தலைமுடியில் ஊற விட்டு பின்பு உங்கள் தலைமுடியை அலசி விடுங்கள். இந்த தேங்காய் பால் முறை, பேன் குறைவதற்கு மட்டும் இல்லாமல் இது உங்கள் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்யும்.

மூன்றாவது டிப்ஸ். இரவு தூங்கும் கொஞ்சம் முன் வாஸ்லினை எடுத்து உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடுங்கள். மறுநாள் காலையில் தேங்காய் எண்ணெய்யை தடவி பேன் சீப் போட்டு வாரினால் போதும் அனைத்து பேன்களும் வந்துவிடும். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.

நான்காவது டிப்ஸ். துளசி இலையை நன்றாக அரைத்து தலையில் தடவி விடுங்கள். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலை முடியை அலசி விடுங்கள். இதனால் முடியும் நன்றாக வளரும். பேன் தொல்லையும் நீங்கும். இது போன்ற எளிய வழிகள் உங்கள் தலையில் பேன் ஈறு பொடுகுகளை போக்குவதுடன், உங்கள் முடியும் நன்றாக வளர உதவி செய்யும்.

- Advertisement -