தலை நிறைய பேனும், பொடுகுமா இருக்கா? இந்த 2 பொருள் போதும் இனி உங்கள் முடியில் ஒரு பேன் கூட பிறக்காது, பொடுகு சுத்தமாக வராது, அரிப்பு நிற்கும்!

pen-podugu-veppampoo
- Advertisement -

நம் தலை முடியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் தூசிகள் காரணமாக வறட்சி உண்டாகிறது. இந்த வறட்சி தலை முடியின் வேர்க்கால்களில் படிகங்களாக படிந்து வெள்ளை வெள்ளையாக பொடுகு போல தோன்ற ஆரம்பிக்கின்றன. பொடுகு இருப்பவர்கள் தலையை சொரிந்து விட்டு முகத்தில் கை வைத்தால் முகம் முழுவதும் முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். பூஞ்சை தொற்று ஏற்படுத்தக் கூடிய இந்த பொடுகை என்ன செய்தாலும் போக்க முடியவில்லையா?

ஒரு முறை வாரினாலும் மீண்டும் மீண்டும் பேன் தொல்லை நில்லாமல் படை எடுக்கிறதா? அப்படின்னா நீங்க செய்ய வேண்டியது இதுதான்! இதை மாதம் 4 முறை செய்தால் மட்டும் போதும், தலையில் ஒரு பேனும் வராது. பொடுகு கொஞ்சம் கூட இல்லாமல் தலை சுத்தமாக இருக்கும். அப்படி நாம் பயன்படுத்த இருக்கும் அந்த அற்புத பொருட்களின் தகவலை பற்றி தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

ரொம்பவே சுலபமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு மூலிகை பொருட்கள் தலைமுடி பிரச்சனைகளை ரொம்பவே எளிதாக நீக்கக்கூடிய அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம் தலை முடியில் இருக்கும் பொடுகு மற்றும் பேன் பிரச்சினைகளை முற்றிலுமாக ஒழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

கொஞ்சம் கூட ரசாயன கலவைகள் இல்லாத இந்த இயற்கையான மூலிகை பொருட்களை எப்படி தலைக்குப் பயன்படுத்தலாம்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? தலை முடியில் இருக்கும் அரிப்பு, எரிச்சல், புண் போன்ற தொந்தரவுகளும், பொடுகு போன்ற பிரச்சனைகளையும் எளிதாக நீக்க கூடிய அற்புதமான ஆற்றல்களை கொண்டுள்ள வால்மிளகு மூலிகை பொருட்களில் ஒன்றாகும். இதை தலை முடிக்கு பயன்படுத்துவதால் கொஞ்சம் கூட பொடுகு இல்லாமல் தலைமுடி ரொம்பவே சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

ஒரு பத்து வால் மிளகை எடுத்து நன்கு பவுடராக நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பவுடருடன் கொஞ்சம் சுத்தமான பால் சேர்த்து கலந்து விடுங்கள். இதை தலையின் மண்டை ஒட்டு பகுதி முழுவதும் நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள். முடி பகுதிகளில் தடவ வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பத்து நிமிடம் கழித்து தலைக்கு எப்பொழுதும் போல சாதாரண ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். இது போல நான்கு வாரம் தொடர்ந்து செய்து பாருங்கள். தலைமுடியில் ஒரு பொடுகு கூட மேய்ந்துக் கொண்டு இருக்காது. அவ்வளவு சுத்தமாக மாறும்.

அதே போல பேன் தொல்லை நீங்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெயுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு காய்ந்த வேப்பம் பூவை போடுங்கள். நன்கு காய்ச்சி பின்னர் அதை ஆற வைத்து விடுங்கள். ஆற வைத்த பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி கொண்டே வாருங்கள். இது போல ஒரு மாதம் இந்த எண்ணெயில் மசாஜ் செய்து தலைக்கு குளித்துப் பாருங்கள். பொடுகு, பேன், அரிப்பு போன்ற எந்தப் பிரச்சினைகளும் இனிமேல் உங்கள் தலையில் எட்டிக் கூட பார்க்காது.

- Advertisement -