3 வாரத்தில் பேன், பொடுகு, ஈறு மூன்றும் ஒரே நேரத்தில் போக இதை மட்டும் தலைக்கு குளிக்கிறதுக்கு முன்னாடி தேய்ச்சு பாருங்க!

lice-head-oil
- Advertisement -

தலையில் பொடுகு, பேன், ஈறு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அரிக்க ஆரம்பித்து விடும். இந்த பொடுகு தொல்லை நாளடைவில் தலைமுடி அதிகம் உதிர்வதற்கு காரணமாகி விடுகிறது எனவே பேன், ஈறு, பொடுகு ஆகிய இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் விரட்டி அடிக்கக் கூடிய எண்ணெயை எப்படி தயாரித்து பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பேன் என்பது ஒரு வகையான ஒட்டுண்ணி ஆகும். இது ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடியதாக இருக்கிறது. ஒருவருடைய தலையில் பேன் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல் அல்லது சீப்பு மூலமாக இன்னொருவருக்கு எளிதாக பரவி விடும். இது தலையில் ஊற அரிப்பு ஏற்படுகிறது. இதனால் தலையை சொரிந்து தலை முடியின் வேர்க்கால்களை டேமேஜ் செய்து விடுகிறோம். இதனால் புண் ஏற்பட்டு வலியும் உண்டாகிறது.

- Advertisement -

குறிப்பாக இந்த பேன் தொந்தரவு பள்ளி குழந்தைகளை எளிதாக பாதிக்கும். அருகருகே அமர்ந்து கொள்வதால் இளம் வயதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாக இந்த பிரச்சனை வந்து விடுகிறது. ஒரு பேன் மூலம் அதிக அளவிற்கு பேன் உற்பத்தியாகி விடும் என்பதால் இதனை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.

இதற்காக நாம் முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்ததில் இருக்கும் ஜெல்லை நன்கு சுத்தம் செய்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நான்கு வகையான எண்ணெய்களை சேர்க்க வேண்டும். பொதுவாக பேன் தொல்லையை போக்கக் கூடியது கடுகு எண்ணெய் ஆகும். கடுகு எண்ணெயில் இருக்கும் வாசம் பேனுக்கு பிடிக்காது. இதனால் பேன் தலையை விட்டு ஓடி விடுகிறது.

- Advertisement -

கடுகு எண்ணெயுடன் பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை ஒரு தேக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். எல்லாமே ஒரே சமமான அளவில் இருக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு ஷைனிங் மற்றும் உயிரோட்டம் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பாதாம் எண்ணெய் முடிக்கு சத்துக் கொடுத்து வளர்ச்சியை தூண்டி விட செய்கிறது. கற்றாழை தலை முடியில் இருக்கும் பொடுகு, ஈறு போன்ற தொந்தரவுகளை ஒழித்து கட்டுகிறது. இது போன்று தலைமுடி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய இந்த ஐந்து வகையான எண்ணெயையும் சரிசமமான அளவில் நன்கு கலந்து ஒன்றுடன் ஒன்று சேருமாறு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த எண்ணெயை தலையில் வேர்க்கால்கள் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் நன்கு படும்படி தேய்த்து விடுங்கள். பின்னர் தலைமுடியை கொண்டை போடுவது போல நன்கு கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் மைல்டான ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்தி தலையை அலசி விட வேண்டும். இதில் பல்வேறு விதமான எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் இதை தலையில் ஊற விடவும் கூடாது. மேலும் அப்படியே விட்டு விடவும் கூடாது. தலைமுடியை கண்டிப்பாக அலசி விட வேண்டும். இவ்வாறு செய்து பாருங்கள் மூன்றே வாரத்தில் இந்த மூன்று பிரச்சனைகளும் உங்கள் தலையில் இருந்து ஓடி இருக்கும், தலை முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

- Advertisement -