வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக்க

white hair musambaram
- Advertisement -

முடி வெள்ளையாக மாறுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வரும் இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தான் இயற்கையும் கூட . ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது. வயதானவர்களுக்கு நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும். அப்படி இருக்கையில் இளம் வயதினருக்கு இந்த நரைமுடி வந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இதனால் அவர்கள் வெளி இடங்களுக்கு செல்லுவதை கூட தவிர்த்து விடுவார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கையே குலைத்து விடும். நரைமுடி என்று சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு விஷயம் இத்தனை பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த இளநரையை போக்க நம் இது வரை பயன்படுத்தாத ஒரு புதிய குறிப்பை பற்றி தான் இப்போழுது இந்த அழகுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இளநரை மறைய வழி

இதற்கு நாம் ஒரு மூசாம்பரம் என்னும் பொருளை மட்டும் நாட்டு மருந்து கடையில் வாங்க வேண்டும். இது கற்றாழை ஜெல்லில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை நாம் பயன்படுத்தாமல் தூர போட்டு விடுவோம். அந்த திரவத்தை சேகரித்து வைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த முசாரம். இதை வைத்து தான் இளநரை தடுப்பதற்கான இந்த பேக்கை தயார் செய்யப் போகிறோம்.

இந்த பேக் தயாரிக்க முதலில் கால் கப் நல்ல முற்றிய தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இதிலிருந்து கிடைக்கும் திக்கான தேங்காய் பாலை அரை டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் போதும். இப்போது ஒரு பவுலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி அதில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இது குறைந்தது 4 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். இந்த நேரத்திற்குள்ளாக இதில் உள்ள இந்த முசாரம் தேங்காய் பாலில் நன்றாக ஊறி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். இதை நீங்கள் தலையில் பேக்காக அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். இது ஒரு மணி நேரம் வரை தலையில் இருக்கட்டும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூவை போட்டு தலைக்கு குளித்தால் போதும்.

இதையும் படிக்காலமே: முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தும் போது உங்களின் இளநரை பிரச்சனை ஒரு மாதத்திற்குள்ளாகவே சரியாகி விடும். அது மட்டும் இன்றி இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது வெள்ளை முடி வருவது தடுப்பதோடு, வெள்ளை முடியும் கூட நிறம் மாறக் கூடிய வாய்ப்பு உண்டு. தலைக்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த ஹேர் டைமர் வரக்கூடிய பிரச்சனைகளை தடுக்க, இது போல இயற்கையான முறைகளை பின்பற்றுவது சிறந்தது.

- Advertisement -