ஆடையில் பட்ட பேனா மை கறையை நீக்க வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் போதுமே! கொஞ்சம் கூட மை கறை தெரியாமல் நீக்க செலவில்லாத வழிகள் என்ன?

ink-corn-flour
- Advertisement -

நமக்கு விருப்பமான ஆடைகளில் தெரியாமல் பேனா மை கறை பட்டுவிட்டால் ரொம்பவும் வருத்தப்பட்டு போவோம். என்னதான் அடித்து துவைத்தாலும் விதவிதமான டிடர்ஜென்ட் பவுடர்கள் வாங்கி போட்டு பார்த்தாலும் கறை மட்டும் அவ்வளவு எளிதாக நீங்கி விடாது. பேனா மை கறையை கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு செலவில்லாமல் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி நீக்குவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

வீட்டில் இருக்கும் பொருட்களில் ஒன்றாக இருக்கக் கூடிய சோளமாவு இது போல ஆடைகளில் பட்ட மை கறையை ரொம்பவும் எளிதாக நீக்கி விடுகிறது. கான்பிளவர் மாவு என்று சொல்லப்படும் இந்த சோள மாவு கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாலை ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை இன்க் பட்ட இடங்களில் லேசாக தடவி காய விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்த பின்பு சோப் போட்டு எப்போதும் போல நன்கு தேய்த்து எடுத்தால் ரொம்பவே சுலபமாக பேனா மை கறை காணாமல் போயிருக்கும்.

- Advertisement -

பேனா மை ஆர்கானிக் மூலக்கூறு கொண்டு தயாரிக்கப்படுவதால் எளிதில் ஆவியாகிறது. இதனால் விரைவில் கரைக்கக்கூடிய லிபோஃபிலிக் கூறுகள் கொண்டுள்ள பொருட்களை பயன்படுத்தினால் பேனா மையானது கரைந்து தெளிந்துவிடும். இந்த மூலக்கூறு பாலில் அதிகம் காணப்படுகிறது. எனவே இரவு முழுவதும் நீங்கள் பேனா மை கறை பட்ட ஆடையை பாலில் ஊற வைப்பது போல் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து எப்போதும் போல நீங்கள் சோப் போட்டு நன்கு துவைத்தால் ரொம்ப எளிதாக பேனா மை கறை நீங்கிவிடும்.

நகத்திற்கு பயன்படுத்தும் நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது ஹேர்ஸ்பிரே போன்றவை இது போல் ஆடை படியும் பேனா மையை எளிதாக போக்கும் அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது. நகத்தில் போடப்பட்டிருக்கும் நெயில் பாலிசை மட்டும் நெயில் பாலிஷ் ரிமூவர் நீக்குவதில்லை, இதில் இருக்கும் மூலக்கூறுகள் மற்ற சில கறைகளையும் எளிதாக நீக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.

- Advertisement -

எனவே ஆடையில் பட்டிருக்கும் பேனா மை கறையை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவரை கொஞ்சம் தடவி உலர விட்டு பின்னர் துவைக்கலாம் அல்லது ஹேர்ஸ்பிரே அந்த இடத்தில் ஸ்பிரே செய்து வைத்தால் மெல்ல மெல்ல பேன மை கறை கரைய ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் சோள மாவுடன் வினிகர் சேர்த்து கறை உள்ள இடங்களில் தடவி பின்னர் துவைத்தாலும் கறை எளிதாக நீங்கும். நன்கு திக்காக இருக்கக் கூடிய பற்பசை எடுத்து பேனா மை கறையில் தடவி காயவிட்டு பின்னர் துவைத்து எடுத்தாலும் எளிதாக நீங்கும்.

மை பட்டு அதிக நேரம் இல்லாமல் இருந்தால் அதன் மீது உப்பைத் தூவி பின்னர் ஈரமான காகிதத்தை கொண்டு துடைத்து எடுத்தால் நொடியில் மை கரைந்து அது காற்றில் கரைந்து போகும். இப்படி இவற்றில் உங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து பேனா மை கறையை நீக்கி உங்களுக்கு பிடித்தமான ஆடையை மீண்டும் வழக்கம் போல மகிழ்ச்சியாக அணிந்து கொள்ளலாம். நீங்களும் வீட்டில் இதை ட்ரை பண்ணி பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -