பெண்களுக்கு அடிக்கடி வரும் முன் கோபத்தை குறைக்க, இந்த 1 பொருளை வாயில் போட்டுக் கொண்டாலே போதும். நீங்கள் சாந்த சொரூபிணி ஆகி விடுவீர்கள்.

kovam
- Advertisement -

பொதுவாகவே பெண்களுக்கு அதிகமாக கோபம் வரக்கூடாது என்று சொல்லுவார்கள். பெண்கள் என்றால் அவர்கள் பூமா தேவிக்கு சமமாக பொறுமை காக்க வேண்டும் என்று சொல்லி வைக்கப்பட்டுள்ளது. இது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போது எந்த பெண்களும் அந்த பொறுமையை காப்பதே கிடையாது. கோபம் வந்துவிட்டால் பத்திரகாளித்தனமாக கோவப்பட்டு, கத்தி ஆடித் தீர்த்து விடுகிறார்கள். பெண்கள் கோபப்படக்கூடாது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னது எதற்காக தெரியுமா. அவர்கள் அடங்கி போக வேண்டும் என்பதற்காக கிடையாது. பெண்கள் கோபப்பட்டால் அதை இந்த உலகம் தாங்காது. அதனால் தான் பெண்களை பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் நிதானத்தை இழந்து கோபத்தோடு சில முடிவுகளை எடுப்பதன் மூலம் அது பெரிய அளவில் குடும்பத்தில் பிரச்சனைகளை கொடுத்து விடும் என்பதற்காகவும் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். சொல்லப்போனால் பெண்களுக்கு பொறுப்பு அதிகம். கோபத்தில் எடுக்கக் கூடிய முடிவு தவறாக இருக்கும். அவர்கள் எடுக்கக்கூடிய முடிவு அவர்களை மட்டுமல்ல அந்த குடும்பத்துக்கே பிரச்சனையை கொடுத்து விடும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எல்லாம் வகுத்து வைத்துள்ளார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது சரி அதையெல்லாம் விட்டுவிடுவோம். உங்களுக்கு முன்கோபம் அதிகமாக வருதா. முன் கோபத்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வருகிறதா, அதை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும். அதற்காக ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் இதோ.

பெண்களின் கோபம் குறைக்கும் ஏலக்காய்:
புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமையில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பெருமாளையும் நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயின் பாதங்களில் ஒரு ஏலக்காயை வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் கோபம் வரக்கூடாது என்று. பிறகு அந்த ஏலக்காயை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடவா பல்லில் கடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் உமிழ்நீர் வரும். அப்படியே அந்த உமிழ் நீரை விழுங்கியபடி மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, கோபத்தை குறைக்க வேண்டும் என்று 5 நிமிடம் தியானம் செய்யுங்கள். பிறகு ஏலக்காயை துப்பி விடலாம். இல்லை என்றால் மென்று சாப்பிட்டு விடலாம். வாரம் தோறும் புதன்கிழமை இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கு எப்போ கோபம் வருதோ அப்போது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு இதே போல கடவா பல்லில் கடித்துக் கொள்ளுங்கள். கோபத்தில் பேசாதீர்கள். உங்களை கணவர் திட்டினாலும், அப்பா திட்டினாலும், அம்மா திட்டினாலும், மாமியார் மாமனார் திட்டினாலும், அந்த கோபம் இருக்கும்போது வாயை திறக்க கூடாது. அதற்கு தான் வாயில் ஏலக்காய். மனதை சாந்தி செய்ய அந்த உமிழ்நீர் உள்ளே சென்று கொண்டே இருக்கும். தானாக நீங்கள் அமைதியாகி விடுவீர்கள். ஆனாலும் கண்ட்ரோல் உங்கள் கையில் இருக்க வேண்டும் அல்லவா. ஆகவே வாயைத் திறந்து பதிலுக்கு பேசாமல் அமைதி காக்க வேண்டும். உங்களுடைய கோபம் தானாக தனிய தொடங்கும்.

- Advertisement -

மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் தொடர்ந்து பின்பற்றி வர முன்கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணருவீர்கள். ஒரே நாளில் இதெல்லாம் நடக்காது. பழக்கத்தில் தான் வரும். மூன்று மாதம் இதை தொடர்ந்து செய்து பார்க்கும்போதே உங்களுக்குள் இருக்கக்கூடிய வித்தியாசம் தெரியும். அதற்காக பெண்கள் என்றால் கோபமே படக்கூடாது. சாதுவாக இருக்க வேண்டும். கொட்ட கொட்ட குனிந்து போக வேண்டும் என்பதும் அர்த்தம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், இன்னைக்கே இந்த செடியை கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்க்க தொடங்கி விடுவீர்கள்.

நியாயமான இடங்களில், வரக்கூடிய கோபத்தை வெளிப்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் எல்லா இடங்களிலும் பொசுக் பொசுக்கு என கோபப்பட்டால் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது. முன்கோபத்தை மிக அதிகமாகக் கொண்ட பெண்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம். முன்கோபம் அதிகம் உள்ள ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை இந்நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -