பெண்கள் செய்யும் குலதெய்வ பூஜை

kuladheiva poojai
- Advertisement -

குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற்றவர்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். தோஷங்கள் எதுவும் அண்டாது. தீவினைகளும் அகழும் என்று பல நன்மைகள் நமக்கு தெரியும். இந்த நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும். குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்ய வேண்டும். இப்படி வழிபாடுகளை செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எந்த முறையில் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதன் மூலம் குலதெய்வ அருளை பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய முன்னோர்கள் வழியில் தொடர்ச்சியாக வழிபட்ட தெய்வத்தை நாம் வழிபடுவதை தான் குலதெய்வம் என்று கூறுகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை ஆலயத்திற்கு சென்று வருடத்திற்கு ஒரு முறையாவது வழிபட வேண்டும் என்று கூறப்பட்டாலும், அந்த குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு பெண்கள் மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

இந்த பூஜையை மாதத்தின் தொடக்கத்தில் வரக்கூடிய நாளாக பார்த்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். தங்களின் குலதெய்வத்திற்குரிய இஷ்ட கிழமை எதுவோ அந்த கிழமையை தேர்வு செய்து அந்த கிழமையில் இந்த பூஜையை செய்யலாம். தங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை அந்த கிழமையில் செய்ய முடியாது என்னும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து இந்த பூஜையை செய்யலாம்.

எந்த கிழமையில் பூஜை செய்கிறோமோ அந்த கிழமையில் தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு சமையலறைக்கு வந்து அடுப்பை சுத்தமாக துடைத்து அக்னி தேவதையை மனதார நினைத்துக் கொண்டு நாம் எப்படி குலதெய்வ கோவிலில் பொங்கல் வைப்போமோ அதே முறையில் வீட்டில் பொங்கல் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பொங்கல் வைப்பதற்காக பயன்படுத்தும் பானையை வேறு எதுக்கும் உபயோகப்படுத்தாமல் குலதெய்வத்திற்கு பொங்கல் வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொங்கல் செய்த பிறகு வீட்டு பூஜை அறைக்கு வந்து பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் படம் இருந்தால் அந்த படத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்தின் படம் இல்லை என்று நினைப்பவர்கள் குலதெய்வத்தை எந்த ரூபத்தில் வைத்து வழிபடுகிறோமோ அந்த ரூபத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது குலதெய்வத்திற்கு இரண்டு புறங்களிலும் அகலை வைத்து இலுப்பை எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக மலர்களால் குலதெய்வத்தை அலங்காரம் செய்துவிட்டு சிறிது உதிரி பூக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

குலதெய்வத்தின் காயத்ரி மந்திரத்தை கூறிவிட்டு குலதெய்வத்திற்கு உரிய 108 போற்றிகளை கூறி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அர்ச்சனை அனைத்தும் செய்து முடித்த பிறகு பிரசாதத்திற்காக நாம் செய்து வைத்திருந்த சர்க்கரை பொங்கலை எடுத்து வந்து தெய்வத்தின் முன்பாக வைத்துவிட்டு நீருலாவி விட வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு தங்களின் வேண்டுதலை மனதார குலதெய்வத்திடம் கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெறுவதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையில் பல நன்மைகளும் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர விநாயகர் வழிபாடு

முழு நம்பிக்கையுடன் முழு பக்தியுடன் செய்யக்கூடிய பூஜை எந்த இடத்தில் இருந்தாலும் அந்த பூஜைக்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவோம்.

- Advertisement -