பெண்களின் வாழ்க்கையில் பெரிய பெரிய துன்பங்கள் வருவதற்கு காரணம், அவர்கள் செய்யும் இந்த ஒரு சிறு தவறு தான்.

women5
- Advertisement -

நாம் எல்லோரும் கோவில்களுக்கு செல்வதும் வீட்டில் பூஜைகள் செய்வதும், தான தர்மங்கள் செய்வதும் அனைத்துமே நாம் நலமுடன் வறுமை இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காகத் தான் என்றாலும், இது எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் முதலில் கடவுளின் அனுகிரகம் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் மட்டுமே நமது அனைத்து வேண்டுதலும் பலன் கிடைக்கும். அப்படி கடவுளின் அனுகிரகம் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த தலைவிரி கோலம்.

நாம் முன்னோர்கள் எல்லாவற்றையும் காரணத்தோடு தான் சொல்லி வைத்து இருக்கிறார்கள். நாம் தான் அனைத்தையும் மூடநம்பிக்கை, வெட்டிப் பேச்சு என்று அவற்றை புறம் தள்ளி நம்முடைய சௌகரியத்திற்காக அனைத்தையும் மாற்றி விட்டு நாம் கெட்டுப் போவதுடன், நம் குடும்பத்தையும் தீராத வேதனையில் தள்ளி விடுகிறோம்.

- Advertisement -

அந்த காலத்தில் பெரியவர்கள் தலைமுடியை விரித்து போடக்கூடாது என்று கூறிவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதிலும் விளக்கு வைக்கும் நேரம் தலை முடியை விரித்து இருக்கக் கூடாது, தலை முடி எப்போதும் பின்னியே இருக்க வேண்டும். தலைமுடியை ஆற வைக்கும் போது கூட அடியில் ஒரு சிறு முடிச்சாவது போட்டு பிறகு தான் ஆற வைக்க வேண்டும். இதற்கு காரணம் எல்லா மனிதருக்குள்ளேயும் ஒரு ஆத்ம சக்தி இருக்கத்தான் செய்யும். அது நம் உடலிலே இருக்கும் வரை தான் நேர்மறை ஆற்றல்கள் எல்லாம் நமக்குள் நிறைந்திருக்கும். இந்த நேர்மறை ஆற்றல்கள் நம்மிடம் இருந்து விலகி விட்டால் நம் மனம் தீயதை பற்றியும், எதிர்மறை எண்ணங்களை பற்றி எல்லாம் யோசிக்கும். இப்படி அந்த நல்ல ஆத்ம சக்தியானது வெளியே செல்லும் வழி எது தெரியுமா? நம் தலைமுடி விரித்து இருக்கும் போது அதன் அடி முடி வழியேதான். அது மட்டும் இல்லை இந்த எதிர் மறை ஆற்றல், தீய சக்தி, அதே தலை அடி முடி வழியாகத்தான் நம் உடலுக்குள் நுழையும்.

இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், துறவிகளை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எப்போதும் தலை முடியை மொட்டை தான் அடித்து இருப்பார்கள். தலையில் முடியே இருக்காது. இதற்கு காரணம் முடியானது நல்ல சக்தியை வெளியே அனுப்பி தீய சக்தி உள்ளே எடுக்கும். இந்த துறவிகள் பெரும் தவம் செய்து தன்னுள் இருக்கும் ஆத்ம சக்தி அதிகரித்து கடவுளை அடைய பெரிய அளவில் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அது போன்ற நேரங்களில் அந்த முடியின் வழியே நல்ல சக்தி வெளியேறி தீய சக்தி உள்ளே நுழையாமல் இருக்கவும் தான் அவர்கள் எப்போதும் மொட்டை அடித்து கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

இதற்காகத்தான் அந்தக் காலத்தில் தலை முடியை விரித்து விடக்கூடாது, அதிலும் பெண்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்ல காரணம் பெண்கள் சில விஷயங்களை சரியாக செய்தலே குடும்பத்தின் பல பிரச்சனைகளையும் சரி செய்து விடுவார்கள். எனவே தான் இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் ஆண்கள் அவ்வப்போது முடியை வெட்டி விடுவார்கள் இதுவும் ஒரு காரணம்.

ஒரு தலை முடியை பின்னி நேர்த்தியாக வைத்திருப்பதினால் இத்தனை நன்மைகள் ஒரு குடும்பத்தில் இருக்கும். இதோடு சேர்ந்து கடவுளின் ஆசியும் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை நாம் தெரிந்து கொண்ட பிறகாவது, இதை பின்பற்றி நம் வாழ்க்கையை நல்ல முறையாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ தொடங்குவோம்.

- Advertisement -