சமையலறையில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகளில் இதுவும் ஒன்று. இனி இந்தத் தவறை நீங்க செய்யாதீங்க! உங்க வீடு நல்லா இருக்க இந்த தவறை திருத்திக் கொள்வது நல்லது.

rice
- Advertisement -

பெண்கள் செய்யக்கூடாத தவறு என்று பார்த்தால், அந்த பட்டியலில் நிறையவே இருக்கின்றது. யாரும் தெரிந்து, அந்த தவறை செய்வது கிடையாது. சொல்லிக் கொடுப்பதற்கு, நம்முடைய முன்னோர்கள், நம் வீட்டில் இருந்தால், செய்யக்கூடாத தவறுகளை பழக்கவழக்கங்களாகவே நமக்குப் பழக்கி விட்டு விடுவார்கள். புதியதாக கற்றுக்கொண்டு செய்வதற்கு எதுவும் இருந்திருக்காது. நம்முடைய அம்மாவும், பாட்டியும் என்ன செய்கிறார்களோ அதைப் பார்த்து அதன்படி நாமும், நம்முடைய வீட்டில் சில வழிமுறைகளை பின்பற்றினால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் கட்டாயம் குறையும்.

rice-wash-water1

ஆனால், காலம் இப்போது மாறிவிட்டது. இந்த தவறை செய்யக்கூடாது, என்று இளைய தலைமுறைகளுக்கு சொன்னால், ஏன் செய்யக்கூடாது? எதற்கு செய்யக்கூடாது? என்ற எதிர்மறையான கேள்விகள்தான் எழுகின்றது. முடிந்தவரை உங்கள் வீட்டில் உங்களது பாட்டியோ உங்களது அம்மாவோ, எதை சொல்லி தருகிறார்களோ அதை நீங்கள் கற்றுக் கொண்டு, உங்கள் குழந்தைகளுக்கும் அந்த பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

சரி, இப்போது சமையலறையில் அரிசி கழுவும் போது சில பெண்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறை இனி செய்யாதீர்கள். ஊறவைத்த அரிசியை சில பெண்கள் கழுவும்போது பயபக்தியோடு கழுவ மாட்டார்கள். அரிசி என்பது வெறும் அரிசி அல்ல, அன்னபூரணியின் மறு உருவம்தான். விவசாயிகள் தங்களுடைய வியர்வையை சிந்தி விலைய வைப்பதுதான் அந்த அரிசி. நம் பசியை போக்குவதும் அரிசிதான். இத்தனை மகத்துவங்களை மறந்துவிட்டு, அரிசி கழுவும்போது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல், அந்த அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போது, அரிசியை சிங்கிள் சிந்தி விடுவார்கள். இவர்கள் அரிசியை கழுவி விட்டு சென்றதும் பார்த்தால், சிங்கிள் அவ்வளவு அரசிகள் சிதறிக்கிடக்கும்.

rice-boiling

எந்த வீட்டில் பெண்கள் அரிசியை பொறுப்போடு கழுவி, ஒரு அரிசியை கூட சிந்தாமல், உலையில் செலுத்துகிறார்களோ, அந்த வீட்டில் செல்வ செழிப்பு நிலைத்திருக்கும். அந்தப் பெண் கட்டாயம் பொறுப்புள்ள பெண்ணாக நடந்து கொள்வாள் என்பதில் சந்தேகமே கிடையாது. அரிசி கழுவும் போது அரிசியை கீழே சிந்தும் பெண்களெல்லாம் நல்ல குடும்பத் தலைவிகள் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களுக்கு பொறுப்பு என்பது குறைவாக இருக்கும் என்று சொல்வதற்காக தான் இந்த பதிவு. அரிசியை கழுவுவதில் இருக்கக்கூடிய பொறுப்பு தான், குடும்பத்தை நிர்வகிப்பதிலும் வரும்.

- Advertisement -

அந்த காலத்தில் வீட்டிற்கு வந்த மருமகளை, முதலில் விளக்கு ஏற்ற சொல்லுவார்கள். அவள் விளக்கேற்றும் விதத்தை வைத்தே, அந்த பெண்ணின் குணத்தை மாமியார் கணித்து விடுவார்களாம். சிக்கனமாக ஒரே குச்சியில் அந்த மருமகள் தீபத்தை ஏற்றுகிறாளா, அல்லது நிறைய குச்சிகளை செலவழிக்கிறாளா என்பதைக்கூட கண்காணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விளக்கு ஏற்றுவதில் எத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கிறது என்பதை பாருங்கள். பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து தான் இருக்கும்.

deepam

ஊறவைத்த அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் வாயில் போட்டு எச்சில் பண்ணக்கூடாது. அரிசி கழுவும் போது ஒரு அரிசியை கூட கீழே சிந்தாமல் அரிசியை கழுவி, தண்ணீரை வடிக்க வேண்டும். அடுப்பில் உலை பானை நன்றாக கொதித்த பின்புதான், அரிசியை உலையில் போட வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் சாப்பாடு கொதித்து பக்குவமாக வெந்து வரும்வரை, உலையிலிருந்து ஒரு அரிசி கூட அடுப்பின் மேல், நெருப்பில் விழுந்து சிந்தக்கவே கூடாது. சாதம் வெந்து முடிந்ததும், இந்த அரிசி பானையை வெகுநேரம் வடித்து வைக்கக் கூடாது. 8 நிமிடத்திலிருந்து பத்து நிமிடத்திற்குள் அரிசியிலிருந்து கஞ்சு வடித்திருக்கும். உடனே அந்த அரிசியை நிமிர்த்தி தட்டில் இருக்கும் சாப்பாடை வழித்து அரிசிப் பானையில் போட்டு, சாப்பாட்டு பானையை சீராக வைக்க வேண்டும்.

rice

நீங்கள் குக்கரில் சாதம் செய்பவர்களாக இருந்தாலும், அடுப்பில் விசில் வந்து, சாப்பாடு தயாரான பின்பு, அந்த குக்கரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, விசிலை எடுத்து விட்டு, முடிந்தவரை அந்த சாப்பாட்டை வேறு பாத்திரத்திற்கு மாற்றி பக்குவமாக மூடி வைப்பது மிகவும் நல்ல பழக்கமாக இருக்கும்.

rice-cooker

இனி சமையல் செய்யும் பெண்கள் ஊறவைத்த அரிசியை உலையில் போடுவதற்கு முன்பு, யாருக்கும் கொடுத்தும் அதை எச்சில் பண்ணக்கூடாது. தானும் வாயில் கொஞ்சம் அரிசியை எடுத்து போடும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும். குறிப்பாக அரிசியை குழந்தைகள் கையில் கொடுத்து இறக்க விடவும் கூடாது. அந்த குழந்தைகளுக்கு அரிசியின் மகத்துவத்தை புரிய வைத்து வளர்க்க வேண்டும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆயுசுக்கும் மகாலட்சுமி உங்கள் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டாங்க! உங்கள் கைகளால் இந்த பணத்தை தானம் செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -