பெண்கள் தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டில் பிரச்சனைகள் வரும்.

women1
- Advertisement -

என்னதான் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் இருக்கு‌ம். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வந்தாலும், குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த பொருட்களையும், இந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் பிரத்தியேகமாக கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்து சுத்தமாக, பளபளப்பாக நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன இடம் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதோடு சேர்த்து பெண்கள் எந்தெந்த கிழமையில் எந்த நிற வளையல்களை அணிந்து கொண்டால் சந்தோஷம் அதிகரிக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

kungumam-kumkum

பெண்கள் என்றால் மகாலட்சுமி ஸ்வரூபம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதில் புதியதாக சொல்வதற்கு எதுவும் கிடையாது. மகாலட்சுமி சுவரோரமாக பெண்கள் காட்சியளிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய ஆடை அணிகலன்கள் மிக மிக முக்கியம். அந்த வரிசையில் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் கண்ணாடி வளையல், பொட்டு, குங்குமம், மஞ்சள், மருதாணி, முகம் பார்க்கும் கண்ணாடி இந்த பொருட்களை எல்லாம் வைப்பதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இன்னும் சில பெண்கள் இன்னும் செயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். அதெல்லாம் அவரவர் இஷ்டம், அவரவர் வசதிப்படி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் தவறொன்றும் கிடையாது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் எல்லா விதமான பொருட்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் பத்திரப்படுத்தி வைத்து, அதற்கென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி சுத்தமாக பராமரித்து வரவேண்டும்.

Kannadi-valayal

குறிப்பாக உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கண்ணாடி வளையல்கள் நிறைந்திருக்க வேண்டும். அந்த கண்ணாடி வயல்களில் விரிசல் விழுந்து உடைந்து ஏதாவது வளையல்கள் இருந்தால் அதை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுங்கள். உங்களை நீங்கள் அழகாக வைத்துக் கொள்ள, நீங்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி குடி கொண்டு இருப்பாள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை அழகாக பராமரித்து வந்து, உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொண்டாலே, உங்கள் மனநிலை சீராகும். பிரச்சினையில் பாதி குறைந்துவிடும். பெண்களுக்கு வீட்டில் எவ்வளவுதான் வேலை இருந்தாலும் எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களுடைய கடமைகளில் இருந்து அவர்கள் தவறக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் சண்டை இருக்கலாம். பிரச்சினைகள் வரலாம், போகலாம். அந்த சமயத்தில் கூட நீங்கள் தலைவிரி கோளத்தோடு, அழுத முகத்தோடு, பொட்டு வைக்காமல், பூ வைக்காமல் கையில் வளையல் அணியாமல், காலில் கொலுசு போடாமல் இருக்கவே கூடாது என்பது மிக மிக முக்கியமானது. யாராவது எப்படியாவது சண்டை போடும். நீங்கள் உங்களுடைய வேலைகளில் சரியாக இருந்து கொள்ளுங்கள். சண்டை வந்துவிட்டது என்பதற்காக, சமையலறையில் சமைக்காமல் மட்டும் இருக்கக்கூடாது இதுவும் ஒரு மிகப்பெரிய தவறுதான். வீட்டில் யார் சரியாக இல்லை என்றாலும் தவறு கிடையாது. அந்த வீட்டின் பெண்கள் கட்டாயம் சரியாகத்தான் இருக்க வேண்டும்.

kungumam1

சரிங்க, எந்தெந்த கிழமையில் பெண்கள் எந்தெந்த கண்ணாடி வளையல்களை அணியலாம் என்று இப்போது பார்த்துவிடலாமா? திங்கட்கிழமையில் பெண்கள் வெள்ளை நிறம் கலந்த வளையல்களை அணிந்து கொள்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமையில் சிவப்பு நிற வளையல்களை அணிந்து கொண்டால் மிகவும் நல்லது. புதன்கிழமை பச்சைநிற வளையல்களை அணிந்து கொள்ள வேண்டும். வியாழக்கிழமை மஞ்சள் நிற வளையல்களை அணிந்து கொண்டால் நல்லது. வெள்ளிக்கிழமை சிவப்பும் பச்சையும் கலந்த வளையல்களை அணிந்து கொள்ளலாம். சனிக்கிழமை நீலநிறம் அல்லது ஊதா நிறம் வளையல்களை அணிந்து கொள்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமை சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்வது நல்லது‌.

- Advertisement -

Kannadi-valayal

இதெல்லாம் உங்களுக்கு முடியாவிட்டாலும் எல்லா கிழமைகளிலும் சிவப்பு பச்சை நிறம் கலந்த வளையல்களை அணிந்து கொண்டால் மன மகிழ்ச்சியோடு, நிறைவோடு பிரச்சனைகள் குறைவதை உங்களால் நிச்சயம் உணர முடியும் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை படைத்து ஸ்வர்ண பைரவரை வீட்டில் வழிபட்டால் ஸ்வர்ணமும்! செல்வமும்! தடையில்லாமல் கொழிக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -