பெண்கள் வெள்ளி மோதிரம் அணியலாமா? அவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுக்கு உண்டாகும் பலன்கள் பற்றி தெரியுமா?

silver
- Advertisement -

நம் சமூகத்தில் ஆண், பெண் வேறுபாடுகள் பார்ப்பவர்கள் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு ஆன்மீக சம்பந்தமான விஷயங்களிலும் சிலவற்றை ஆண்கள் செய்யலாம், சிலவற்றை பெண்கள் செய்யலாம் என்று பிரித்து கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு பெண்கள் செய்யக்கூடாது என்று கூறப்படும் ஒரு சில ஆன்மீக விஷயங்களை சிலர் ஏன்? எதற்கு? என்ற காரணம் தெரியாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பார்கள். அவ்வாறு ஒரு சிலருக்கு பெண்கள் வெள்ளி மோதிரம் அணியலாமா? அணியக் கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது. வெள்ளி மோதிரம் அணிவதனால் பெண்களுக்கு உண்டாகும் நற்பலன்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ring2

தங்கம், வெள்ளி என்ற இரு வகை உலோகங்கள் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் வெள்ளியை விட விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக சாஸ்திரத்தின் படி தரத்தில் வெள்ளி தான் மிகவும் உயர்வாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு தங்கத்தைவிட அதிக அளவு ஐஸ்வர்யம் நிறைந்தது வெள்ளி உலோகம் தான்.

- Advertisement -

வெள்ளியை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது உடலில் வெள்ளி இடம்பெற்றிருக்கலாம். ஆனால் தங்கத்தினை இவ்வாறு உபயோகப்படுத்த முடியாது. சிலரின் வசதிக்கு ஏற்ப தான் தங்கத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்கள் அதிக அளவு தங்க நகை அணிய மாட்டார்கள். அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது. ஆனால் வெள்ளி அணிவதற்கு இவ்வாறு வரைமுறைகள் கிடையாது.

ring1

வெள்ளி என்பது சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. சுக்கிரனின் அருள் நமக்கு இருந்தது என்றால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஒரு சிலர் தனது வாழ்வில் முன்னேறும் பொழுது அவர்களை பார்த்து மற்றவர் கூறுவது உனக்கு சுக்ர யோகம் அடித்து விட்டது என்றுதான். அவ்வாறு சுக்கிரனின் யோகம் மட்டும் இருந்தால் போதும் பொன், பொருள் அனைத்தும் நம் வீடு தேடி வரும்.

- Advertisement -

எனவே வெள்ளியை பயன்படுத்தி மோதிரம் செய்து அனைவரும் அதிலும் குறிப்பிட்டு பெண்களும் இதனை தங்கள் விரலில் அணிந்து கொள்ளலாம். தங்கத்தினாலான மோதிரத்தை விட வெள்ளியினாலான மோதிரம் தான் பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. ஆண்களாக இருந்தால் வெள்ளி மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.

silver-ring

பெண்ணாக இருந்தால் வெள்ளி மோதிரத்தை நடு விரலில் அணியவேண்டும். ஒரு சிலர் நடு விரலில் மோதிரம் அணியக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அவ்வாறு அணிவதில் தவறொன்றும் கிடையாது. அதிலும் பெண்கள் நடு விரலில் வெள்ளி மோதிரம் அணிவது சிறந்த பலனைக் கொடுக்கிறது. மோதிரம் அணிவதற்கு முதலில் சிறந்தது மோதிரவிரல், இரண்டாவது ஆள்காட்டிவிரல், மூன்றாவது நடுவிரல் இதுமட்டுமல்லாமல் ஐந்து விரலிலும் மோதிரம் அணிந்தாலும் எந்த தவறும் கிடையாது.

silver-ring1

பெண்கள் எப்பொழுதும் தனது உடலில் ஏதேனும் ஒரு ஆபரணம் இருப்பது மிகவும் சிறந்ததாகும். அவ்வாறு இந்த வெள்ளியை எப்பொழுதும் அவர்கள் அணிந்திருத்தல் வேண்டும். ஒரு சிலருக்கு இதில் தங்களின் ராசிக்கான ராசி கல்லை பதிக்கலாமா என்ற சந்தேகம் எழும். அவ்வாறு செய்வதும் சிறந்த பலனை கொடுக்க வல்லது. ஆனால் அப்படி இல்லையென்றாலும் ஏதாவது வளையம் அல்லது பூ போன்ற வடிவத்தில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

- Advertisement -