இந்த 3 குணாதிசயங்களை கொண்ட பெண்கள் எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையில் ஜெயித்து விடுவார்கள்.

women1
- Advertisement -

வாழ்க்கையில் ஜெயிக்க கூடிய பெண்களுக்குத்தான் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். இப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்ட பெண்கள் நிச்சயமாக வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள். மதிக்கத்தக்க இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் பின்பற்ற வேண்டிய அந்த நெறிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. இந்த பதிவு உங்களுக்காக மட்டும். ஒரு வேலை, இந்த பதிவை படித்துவிட்டு இந்த குணாதிசயங்கள் எல்லாம் என்னிடம் இல்லை என்று கஷ்டப்படாதீங்க. இனி வரக்கூடிய காலங்களில் இந்த நெறிமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால், உங்களுடைய வாழ்விலும் சந்தோஷம் மலரும். நீங்களும் நிச்சயம் வாழ்வில் ஜெயிச்சிடுவீங்க.

பெண்கள் என்றால் அவர்கள் அறம் வழியில் நடக்க வேண்டும். அறம் என்றால் நல்வழியில் நடப்பது. நல்வழி என்பது எல்லா வகையிலும் பெண்களிடத்தில் இருக்க வேண்டும். பெண்களின் சொல், செயல், வார்த்தை, நடவடிக்கை, சிந்தனை, தோற்றம் இவை எதிலுமே அடுத்தவர்கள் குற்றம் குறை கண்டுபிடிக்க கூடாது. இந்தப் பெண் ஒரு விஷயத்தை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அடுத்தவர்களுக்கு வர வேண்டும். அடுத்தவர்கள் குறை கூறும் படி எப்போதுமே ஒரு பெண் நடந்து கொள்ளக் கூடாது. இதுவே அறம். பெண்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த அறவழியில் சென்றாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த அறவழியில் இருக்கக்கூடிய ஒரு மூன்று குறிப்புகளை இன்று பார்த்து விடுவோம்.

- Advertisement -

வீட்டில் குடும்பத் தலைவி இருக்கின்றார். குடும்பத் தலைவன் வருமானத்தைக் கொண்டு வந்து குடும்ப தலைவியின் கையில் தான் கொடுக்க வேண்டும். இதுதான் முறை. இன்று இது நடக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சிக்குள் நான் செல்ல வேண்டாம். கணவன், மனைவியின் கையில் வருமானத்தை கொண்டு வந்து கொடுத்த உடனேயே, கணவரின் சம்பாத்தியத்தை மனைவி குறை கூறவே கூடாது. இந்த சம்பாத்தியத்தை வைத்து நம்மால் குடும்பம் நடத்த முடியுமா என்ற கேள்வியை மனதளவிலும் நினைக்கக் கூடாது. இந்த சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி எப்படி மிச்சம் பிடிப்பது என்ற சிந்திப்பவள் சிறந்த பெண். சிறந்த மனைவி. பத்தல பத்தல என்ற வார்த்தையை தயவு செஞ்சு இனி விட்டுடுங்க. எண்ணம் போல் தான் வாழ்க்கை. பெண்கள் மனதளவில் எதை நினைக்கிறார்களோ, அது அவர்களுடைய வாழ்வில் அப்படியே நடந்து விடும்.

இரண்டாவது விஷயத்தை பார்த்து விடுவோம். இப்போது இருக்கக்கூடிய பெண்களிடத்தில் எல்லாம், இதை நீ செய்ய வேண்டும். இதை நீ செய்யக்கூடாது, என்று சொன்னால், ‘இதை எதற்கு செய்ய வேண்டும். எதற்கு செய்யக்கூடாது.’ என்று ஆராய்ந்து பார்ப்பதில் மிகவும் நுணுக்கமான அறிவை பெற்றிருக்கிறார்கள். இது சந்தோஷப்பட கூடிய விஷயம் தான். ஆனால், எல்லா சாஸ்திரமும் ஏன் பெண்ணுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எந்த வேலையும் இல்லையா? ஆண்கள் எந்த சாஸ்திர சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்க மாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இது மிகவும் தவறான ஒரு விஷயம்.

- Advertisement -

ஆண்களும் பெண்களும் சரிசமம் தான். அதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், அவர் அவர்களுக்கு உண்டான கடமை என்பது வெவ்வேறாக உள்ளதே. அதற்காக பெண்களுக்கு விதிக்கப்பட்ட சில விதிமுறைகளை பெண்கள் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். சில விதிமுறைகளை மீறும் போது இழப்பு என்பது பெண்களுக்குத்தான். ஆகவே முன்னோர்கள் சொன்ன நல்ல விஷயங்களை பெண்கள் நிச்சயம் ஆதரிக்க வேண்டும். இப்படி அனுசரித்து எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றக் கூடிய பெண்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிப்பார்கள்.

பெரும்பாலும் திருமணம் ஆன பெண்களுக்கு இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் நிறைய பிரச்சனை வருகிறது. இதற்கு முதல் காரணம் அம்மா வீட்டில் இருந்து, மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்களின் மன நிலைமையில் பக்குவம் இல்லை. பெண்கள், தங்களுடைய அம்மா அப்பாவை தங்களுடைய உடன்பிறந்தவர்களை பார்ப்பது போல தன்னுடைய தாய் வீட்டிற்கு முக்கியத்துவத்தை கொடுப்பது போல, தன்னுடைய புகுந்த வீட்டில், கணவரின் தாய் தந்தைக்கோ, கணவரின் சொந்த பந்தங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடிய பெண்களுடைய வாழ்வு சிறப்படையும். ஒட்டுமொத்த பெண்களையும் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். சில பெண்கள் செய்யக்கூடிய தவறு குடும்பத்தில் இருக்கக்கூடிய நிம்மதியை அழித்து விடுகிறது. ஆக நீங்கள் தெரியாமல் இந்த தவறுகளை செய்து வந்தாலும் இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

கணவரின் வருமானத்திற்குள் குடும்பம் நடத்த வேண்டும். சம்பிரதாயங்களை ஏன் எதற்கு என்று குதர்க்கமாக ஆராயாமல் முன்னோர்கள் சொல்படி நடக்க வேண்டும். புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும். இந்த 3 விஷயங்களை சரியாகப் பின்பற்றும் குணாதிசயத்தைக் கொண்ட பெண் வாழ்க்கையில் ஜெயிப்பது உறுதி. மேலே சொன்ன குணாதிசயங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -