கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்!.

templel
- Advertisement -

கரூர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ‘பூமிக்கு உள்ளே பழங்கால கோயில் இருக்கும் போல. அந்த கோயிலின் மதில்சுவர் தெரியிற அளவுக்கு தோண்டிட்டோம். ஆனால், மேற்கொண்டு தோண்டவிடாம பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்துட்டாங்க.

lingam

 

- Advertisement -

தொல்லியல்துறை இங்கே ஆய்வு பண்ணினா கீழடி, அழகன்குளம் அகழ்வாய்வுகளை தாண்டிய புராதான பொருள்கள் கிடைக்கலாம்” என்று பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது மேட்டுத்திருக்காம்புலியூர். இந்த கிராமத்தில்தான் மக்கள் பழங்கால கோயில் பூமிக்கடியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அங்கு என்ன நடந்தது என்பதை அந்த கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரிடம் கேட்டோம்.

- Advertisement -

“இரண்டு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல மழை பெஞ்சப்ப தரையில் ஒரு சிறிய லிங்கமும், மூன்றடி உயர நந்தியும் பூமிக்கு வெளிய தெரிஞ்சுச்சு. ஆச்சர்யமான நாங்க, அவற்றை ஒரு ஓரமா கொட்டகை போட்டு, அதுல வச்சு வழிபட தொடங்கினோம். இந்நிலையில்தான், ஊரில் சில அசம்பாவிதங்கள் நடந்துச்சு.

 

- Advertisement -

உடனே, அந்த சிவனையும், நந்தியையும் வைத்து கோயில் கட்ட முடிவெடுத்தோம். இதற்காக, பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு பெரியவர்கிட்ட குறி கேட்டோம். அதுக்கு அவர்,’நீங்க லிங்கத்தை கண்டெடுத்த இடத்துக்கு கீழே பூமியில் அம்மன் சிலை ஒன்றும் இருக்கு. அதையும் எடுத்து, அங்கேயே கோயில் கட்டுங்க’ன்னு சொன்னார். ‘சரி சாமி’ன்னு சொல்லிட்டு வந்து, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்துல தோண்டினோம்.

suvar

இருபதடி தோண்டுன உடனே கருங்கல்லில் அமைந்த அம்மன் சிலை கிடைச்சுச்சு. கூடவே,கோயில் இருப்பதற்கான அறிகுறியும், மதில்சுவரும் தென்பட்டுச்சு. மேற்கொண்டு தோண்டி பார்க்க நினைச்சப்ப, தகவலை கேள்விப்பட்டு கிருஷ்ணராயபுரம் தாசில்தார் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். ‘நீங்க தோண்டக் கூடாது. கீழே கோயில் புதைந்திருப்பது போல் தெரியுது. தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து, அவர்களை ஆய்வு பண்ண சொல்லுவோம். தோண்டிய வரையில் அப்படியே இருக்கட்டும். மேற்கொண்டு தோண்ட வேண்டாம்’ன்னு சொன்னார். நாங்களும் சரின்னு விட்டுட்டோம்.

ஆனால்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, ‘இங்க உங்களை யாரு தோண்ட சொன்னது?. அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தா?. மரியாதையா தோண்டிய குழியை பழையபடி மூடிடுங்க. இல்லைன்னா, உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ன்னு மிரட்டினாங்க. தாசில்தார்,’அப்படியே இருக்கட்டும்’ன்னு சொல்லி இருக்கார். ஆனா,பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த குழியை மூட சொன்னதும் எங்களுக்கு கோபம் வந்துட்டு. ‘நாங்க இனிமே குழி தோண்டலை. தொல்லியல் துறை வரட்டும். அவங்க பார்த்துக்கட்டும். நீங்க ஏன் மூட சொல்றீங்க’ன்னு கேட்டோம். ‘குழியை மூடுங்க. அவ்வளவுதான்’ன்னு ஸ்க்ட்ரிட்டா சொல்லிட்டாங்க.

- Advertisement -