டீ எல்லாரும் தான் குடித்து இருப்போம். ஆனா இது மாதிரி ஒரு பர்பெக்ட்டான மசாலா டீ குடிச்சி இருக்கீங்களா, இத படிச்சிட்டு ட்ரை பண்ணி பாருங்க டீ டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்தவுடன் டீயோ, காப்பியோ ஏதாவது ஒன்றை கட்டாயம் குடித்தே ஆக வேண்டும். அப்போது தான் நமக்கு அந்த நாளே இனிதாக தொடங்குவது போல் இருக்கும். இந்தப் பழக்கம் சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ளது. ஆனால் அப்படி காலையில் எழுந்ததும் நாம் முதல் முதலில் குடிக்கும் இந்த டீ, காபி, ஏதோ குடிக்க வேண்டும் என்று கடமைக்காக போட்டு குடிக்காமல் நல்ல சுவையான முறையில் போட்டு குடித்தால் காலை வேலையை இனிதாக தொடங்குவதை போல் உணரலாம். அதற்கு இந்த மசாலா டீயை ட்ரை பண்ணி பாருங்க

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்: சோம்பு – 2 ஸ்பூன், ஏலக்காய் – 30 , கிராம்பு – 5, மிளகு – 8, நட்சத்திர பூ – 1, உப்பு – 1 சிட்டிகை, ஜாதிக்காய் – 1/4 பங்கு.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து சூடானதும் இந்த மசாலாக்களை லேசாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த மசாலாக்களை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, (ஜாதிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி ஒரு ஜாதிக்காயில் கால் பங்கு அளவுக்கு இழைத்து பவுடராக எடுத்துக் கொள்ளுங்கள்)ஜாதிக்காய் பவுடர் அதையும் இதில் சேர்த்து சற்று கொரகொரப்பாகவே அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்த பிறகு அதில் ஒரு பாத்திரம் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் (நீங்கள் ஒரு டம்ளர் பால் ஊற்றுவதாக இருந்தால் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் வைக்க வேண்டும்). வைத்து அதில் அரைத்துண்டு இஞ்சி, ஒரு டேபிள் ஸ்பூன் டீ தூள், சேர்த்து கொதிக்க விடுங்கள். கொதித்த பிறகு சர்க்கரை (நான்கு பேருக்கு டீ போடுவதாக இருந்தால் நான்கு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை போதும்) சேர்த்து நன்றாக இந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும். அப்போது தான் இந்த டீத்தூளில் உள்ள சாறு இந்த தண்ணீரீல் நன்றாக இறங்கி இருக்கும். கட்டாயம் தண்ணீர் கொதிக்கும் போது தான் சர்க்கரை போட வேண்டும். சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு கடைசியாக பாலை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

பாலை காய்ச்சும் போது தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். பாலை இந்த டிக்காஷனில் சேர்த்து நன்றாக ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலா பவுடரை ஒரு ஸ்பூன் போட்டு அப்படியே ஒரு இரண்டு நிமிடம் விட்டு விடுங்கள். அவ்வளவு தான் ஒரு பர்பெக்ட்டான மசாலா டீ தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சுட்ட கத்திரிக்காய் தொக்கு பாரம்பரிய முறையில் வீட்டில் எளிதாக செய்வது எப்படி? இனிப்பும், புளிப்புமாக இருக்கும் கத்திரிக்காய் தொக்கு இப்படி செஞ்சா இட்லி, தோசைக்கு அருமையாக இருக்குமே!

நீங்கள் டீ போடும் போது மேலே சொன்ன குறிப்புகளை மறக்காமல் பாலோ பண்ணுங்க. அப்ப தான் அப்போது தான் இந்த மசாலா டீ ஹோட்டலில் குடிப்பதை போல ப்ரபெக்ட் சுவையுடன் இருக்கும்.

- Advertisement -