உடலில் இந்த ஒரு ஆபரண பொருளை அணிந்து இருப்பவர்களுக்கு தங்கள் பரம்பரையையே அழித்து விடும் அளவிற்கு தரித்திரம் சேர்ந்துவிடுமாம். அப்படிப்பட்ட பொருள் என்னவென்று தெரியுமா

gold
- Advertisement -

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் அவரவர்களுக்கென்று அணிந்து கொள்வதற்கு ஏற்றார் போல் ஆபரண நகைகள் ஏராளமாக இருக்கின்றன. என்னதான் லாக்டவுன் காலமாக இருந்தாலும் சரி, நல்ல சூழ்நிலையாக இருந்தாலும் சரி தங்க நகை கடைகளில் இன்றளவிலும் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஆபரண நகைகளின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகமாக தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கோ தங்களிடம் இருக்கும் நகைகளை தாண்டி வேறு என்ன நகை வாங்குவதென்றே தெரியாமல் புதியவகை அணிகலன்களையெல்லாம் தங்கத்தில் செய்து போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு உடலில் அணியும் ஒருசில அணிகலன்களால் நமக்கு தரித்திர நிலை உண்டாகிறது. கோடி கோடியாய் பணம் இருந்தாலும் இவ்வாறான தரித்திர நிலைமை வந்ததென்றால் பிச்சைக்காரனாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு நம் உடலில் அணியக் கூடாத அந்த பொருள் என்ன என்பதனையும், அதனால் உண்டாகும் பிரச்சனைகள் என்ன என்பதனையும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

gold

நவ கிரகமான ஒன்பது கிரகங்களில் தங்கத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான் ஆவார். தங்கத்தினை மகா லட்சுமியின் அம்சமாகவும் பலர் பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் குருபகவானே தங்கத்திற்கு உரியவராவார். எனவே நம் உடலில் அணியும் தங்கத்திற்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறோமோ அதுவே நாம் குருபகவானுக்கு கொடுக்கின்ற மரியாதைக்கு சமமாகும்.

- Advertisement -

அவ்வாறு தங்கத்தினாலான நகைகளை உடம்பில் இடுப்பிற்கு மேல் பகுதியில் மட்டும் தான் அணிய வேண்டுமே தவிர இடுப்பை விட்டு கீழறிக்கி எந்த ஒரு பொருளையும் அணிவதென்பது நமக்கு நன்மை தரக்கூடியதாக இருப்பதில்லை. ஒரு சிலர் தங்க கொலுசு, தங்கமெட்டி போன்ற அணிகலன்களை மிகவும் ஆசையாக அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு பணம் இருக்கிறது என்பதற்காகவும், நாம் ஆசைப்படுவதற்காகவும் நான் செய்யும் இந்த செயலினால் நம்மிடம் இருக்கும் சந்தோஷமும், செல்வமும் நம்மை விட்டு அகன்றுவிடும் நிலைமை உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு செய்வதால் நாம் குரு பகவானின் தோஷத்திற்கும் ஆளாகி விடுகின்றோம்.

kolusu

ஒரு குழந்தை பிறந்தது முதல் நடக்க துவங்குவதற்கு முன்பு வரை உடம்பில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தங்க நகைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் அந்த குழந்தைக
எப்போது பூமியில் பாதம் பதித்து நடக்க ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்து இடுப்பிற்கு கீழ் பகுதியில் எங்கும் தங்கம் அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.

- Advertisement -

நமது புராணங்களிலும், கதைகளிலும் கேள்விப்பட்டிருப்போம் கற்புக்கரசி கண்ணகி அவர்களும் தங்க சிலம்பின் காரணமாகவே தனது கணவனை இழந்து மதுரையை எரித்தார் என்று. இவர் பிறந்ததில் இருந்தே மிகவும் செல்வ செழிப்புடன் தங்கத்தினாலான அணிகலன்களையே உடல் முழுவதும் அணிந்திருந்தார். இவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்கும் காரணம் காலில் தங்கம் அணிந்ததன் தரித்திர நிலையாக கூட இருக்கலாம்.

kannagi

அவ்வாறு நல்லதங்காள் என்பவரும் தனது சகோதரர்களுடன் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகும்பொழுது தங்கத்தினாலான காலணிகளை அணிந்திருந்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமணமான சில காலங்களிலேயே இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து நல்லதங்காள் அவரது பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து இறந்தாள். என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வாறு பல சாம்ராஜ்யங்கள் தங்கத்திற்கு கொடுக்க வேண்டிய மதிப்பினை கொடுக்காததால் அழிந்திருக்கின்றன.

nalla

எனவே தங்கத்திற்கு நாம் எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மிடம் நிலைத்திருக்கும். ஆனால் அதற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் குரு தோஷத்திற்கு ஆளாகி நமது பரம்பரையே அழிந்து விடும் அளவிற்கு தரித்திரம் உண்டாகும்.

- Advertisement -