- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சனைகள் பறந்தோட பெருமாள் பரிகாரம்

பிரச்சனைகள் பறந்தோட பெருமாள் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கும். அளவில் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் பிரச்சனை என்பது இல்லாமல் இருக்காது. அந்த பிரச்சினையை எந்த முறையில் சமாளித்து வெளியே வருகிறோம் என்பதில்தான் நம்முடைய திறமையும் சாமர்த்திய தனமும் இருக்கிறது. பலரும் முயற்சி செய்ய தான் செய்கிறார்கள். இருப்பினும் அந்த முயற்சியில் வெற்றி அடைவது கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரச்சனைகள் பறந்தோட பெருமாள் பரிகாரம்

முப்பெரும் தேவர்களும் மூன்று தொழில்களை செய்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். பிரம்மா படைத்தல் தொழிலையும், விஷ்ணு காத்தல் தொழிலையும், சிவன் அழிக்கும் தொழிலையும் செய்கிறார். அந்த வகையில் நம்மை படைத்த பிரம்மனால் நம்மை காப்பாற்ற முடியாது அவர் எழுதிய தலையெழுத்து அப்படியே தான் இருக்கும். நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு மோட்சத்தை தரக்கூடிய சிவபெருமானும் எந்தெந்த ரூபத்தில் நமக்கு கஷ்டங்களை தர முடியுமோ எந்த ரூபத்தில் நம்முடைய கர்ம வினைகளை தீர்க்க முடியுமோ அந்த வழிகளை மட்டுமே காட்டுவார். நடுவில் இருக்கக்கூடிய காத்தல் தொழிலை செய்பவர்தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. அதனால் நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த கிழமையாக திகழ்வது சனிக்கிழமை என்பதால் இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று செய்வது மிகவும் விசேஷமான ஒன்று. அன்றைய தினத்தில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அன்றைய தினம் விரதம் இருப்பது நல்லது. அருகில் அரசமரம் இருக்கும் பட்சத்தில் அங்கு செல்ல வேண்டும். இந்த வழிபாட்டை அரச மரத்தடியில் தான் செய்ய வேண்டும். வேறு எங்கும் செய்ய முடியாது என்பதால் சற்று சிரமப்பட்டாவது அருகில் எந்த இடத்தில் அரசமரம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமை வீட்டில் பூஜை எல்லாம் செய்து முடித்த பிறகு அரசமரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரே ஒரு கருப்பு நிற நூல்கண்டு மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

அரசமரத்தடிக்கு சென்று அந்த அரச மரத்தை கருப்பு நூலால் ஒரு முறை சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றும் பொழுது உங்கள் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் பெருமாளிடம் கூறுவது போல அரச மரத்திடம் கூற வேண்டும். இப்படி கூறி முடித்துவிட்டு அந்த கருப்பு நூலால் ஒருமுறை சுற்றிவிட்டு ஏழு முறை முடிச்சு போட வேண்டும். அதாவது ஏழு முடிச்சு போட வேண்டும். இப்படி ஏழு முடிச்சு போடும் பொழுதும் பெருமாளின் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே போட வேண்டும்.

- Advertisement -

இப்படி போடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சரியாவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்றும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக நடைபெறுவதற்கு என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மந்திரம்

ஓம் நமோ பகவதே கிருஷ்ணதேவாய நமஹ

தங்களுடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ச்சியாக முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்