இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா ?

perumaal

திருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள் கோவிலிலும் ஒன்றாக உள்ளது. பெருமாளை காண இங்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பொறுமையாக தரிசித்த செல்கின்றனர். இந்த நிலையில் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே ஒருவர் பெருமாளை தரிசிக்க அனுமதி வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை எழுந்துள்ளது.

perumal

ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் இது குறித்து கூறுகையில், திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாலும், சில பக்தர்கள் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்வதாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் பக்தர்களின் வருகையை ஆதார் அட்டையோடு இணைத்து, முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்த பின் இரண்டு முறைக்கு மேல் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு இருந்தால் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் பார்க்கலாமே:
திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ

இதன் மூலம் நிறைய பக்தர்கள் பயனடைவார்கள் என்றும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எப்போதில் இருந்து பின்பற்றப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இது பின்பற்றப்பட்டால் ஆதார் அட்டை இல்லமால் ஏழுமலையானை தரிசிப்பது கடினம் என்பது மட்டும் உறுதி.