- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு

வேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு

- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் வழிபாட்டை மேற்கொள்கிறோம். எனக்கு இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும், இது கிடைக்க வேண்டும், அது கிடைக்க வேண்டும் என்றுதான் தெய்வத்திடம் வேண்டுதல் வைக்கின்றோம். இப்படி வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறதா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வேண்டுதல் நிறைவேறுவது கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் அவர்களுடைய உண்மையான பக்தி தான். யார் ஒருவர் உண்மையான பக்தியுடன் முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு தான் வேண்டியது நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் நிறைவேறுவதற்கு பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு

இந்த பூலோகத்தில் நாம் எந்த அளவிற்கு நன்றாக வாழ்கிறோமோ, வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவிற்கு பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். பெருமாள்தான் காக்கும் தெய்வமாக திகழ்கிறார். நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நம்மை காத்து ரட்சித்து, நாம் நலமோடு வாழ்வதற்கு தேவையான பொன்னையும், பொருளையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாளிடம் நம்முடைய வேண்டுதலை நாம் வைக்கும் பொழுது நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அது விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை புதன்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்றைய தினம் பெருமாளை நினைத்து உபவாசம் இருக்க வேண்டும். காலையில் பால் பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம். மதிய நேரத்தில் பூண்டு, வெங்காயம் சேர்க்காத சமையலாக செய்து இலையில் போட்டு சாப்பிட வேண்டும். இரவு பலகார வகைகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த முறையில் தான் விரதம் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாருங்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். புதன்கிழமை செய்வதாக இருந்தால் 9 புதன்கிழமையும், சனிக்கிழமை செய்வதாக இருந்தால் 9 சனிக்கிழமையும் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு துளசி இலைகளை மற்றும் வாசனை மலர்களை வைத்து அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்கள், தாமரைப்பூ, துளசி போன்றவற்றை வாங்கி தர வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நாம் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது மாவிளக்கு தீபமாக இருக்க வேண்டும். வீட்டிலேயே பச்சரிசி மாவை தயார் செய்து அதனுடன் சிறிது வெல்லத்தை கலந்து மாவிளக்கு தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாளுக்கு எதிராக ஒரு இடத்தை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் ஒரு வாழை இலையை வைத்து இரண்டு மாவிளக்குகளையும் அதன் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாவிளக்குகளுக்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த மாவிளக்கிற்கு முன்பாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் என்று வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த கற்பூரமானது பச்சை கற்பூரமாக இருப்பது சிறப்பு. இப்படி பச்சைக் கற்பூரத்தை ஏற்றிய பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை பூர்த்தி செய்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனி மகா பிரதோஷ வழிபாடு

இந்த பெருமாள் வழிபாட்டை பெருமாளின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்