பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி செய்யவே கூடாது. அது நமக்கு பெரிய பாவத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

thulasi-perumal
- Advertisement -

பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல, எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது. அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம், தீர்த்தமாக இருந்தாலும் சரி, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு பக்கம் இருக்க, நமக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் இந்தத் துளசிக்கு முதலிடம் உண்டு. ஆக மொத்தத்தில் துளசி என்பது நமக்கு கிடைத்த ஒரு வரம். ஒரு பொக்கிஷம் என்று கூட சொல்லலாம்.

perumal

நிறைய பேர் பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட துளசியை, வெறும் இலைகளாக ஆக நினைத்து கைகளில் வாங்கி, அந்த கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அதாவது கையில் விபூதி குங்கும பிரசாதத்தை கொட்டும்போது, பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட துளசியையும் கோவிலில் எங்காவது ஒரு இடத்தில் அப்படியே போட்டு விட்டு வருவது சிலருக்கு வழக்கமாக இருக்கும்.

- Advertisement -

இது மிகப்பெரிய தவறு. கோவிலில் கொடுக்கும் எந்த பிரசாதமாக இருந்தாலும் அதை கோவிலில் கொட்டி அசுத்த படுத்துவது முதல் தவறு. அதோடு மட்டுமல்லாமல் கோவிலில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்தை துச்சமாக நினைத்து ஏதாவது ஒரு இடத்தில் கொட்டி விட்டு வருவது என்பது, அவளது சரியான காரியம் அல்ல. பெருமாள் கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தம் உங்கள் கையிலிருந்து முடிந்தவரை தரையில் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே முழுமையாக குடித்து விட வேண்டும். உள்ளங்கையில் இருந்து வாயில்வைத்து பருகிய தீர்த்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் உச்சந்தலையில் தடவி கொள்ளாதீர்கள். பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி நாம் பருக கூடிய ஒரு சொட்டு தீர்த்தமானது நம் உடலையும் சுத்தப்படுத்தும் நம் மனதையும் சுத்தப்படுத்தும்.

Thulasi

சரி, அப்போது இந்தப் பெருமாள் கோவிலில் இருந்து பெறக்கூடிய துளசியை என்னதான் செய்வது? கட்டாயமாக பெருமாள் கோவிலில் இருந்து உங்கள் கைக்கு வந்த அந்த பிரசாதத்தை, வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த துளசியை போட்டு விட்டு, அந்த தண்ணீரை தீர்த்தமாக நினைத்து குடித்து விடலாம். அப்படி இல்லை என்றால் அந்த துளசியை பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். உங்களுடைய பர்சில் வைக்கலாம்.

- Advertisement -

துளசி கட்டாயம் வாடி போகத் தான் செய்யும். தினம் தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்பவர்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காய்ந்த துளசியை சேகரித்து செடிகளுக்கு அடியில் போட்டுவிடலாம். அப்படி இல்லை என்றால் இதை தூள் செய்து தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து கொள்ளலாம். அந்தத் துளசி தூளை கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் தெரிவித்தால், வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி சுபிட்சம் அடையும்.

perumal

இப்படியாக பல வகைகளில் அந்த துளசியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கைக்கு பிரசாதமாக வந்த துளசியை நீங்கள் உங்கள் வீட்டு வாசல் படிக்கு உள்ளே கொண்டுவராமல் வீட்டுக்கு வெளியில் போடுவது பெரிய பாவத்தை, ஆன்மீக ரீதியாக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக வாங்கப்பட்ட துளசியை வீணாக்கக்கூடாது, கட்டாயம் அந்த துளசியை நம் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -