பலமுறை முயற்சி செய்தும் ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையா? கஷ்டமான விஷயத்தை கூட, சுலபமாக ஜெயிக்க சின்ன சூட்சம ரகசியம் உங்களுக்காக!

perumal

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஒரு மனிதன் வெற்றியை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால், தோல்வியில் இருக்கக்கூடிய அனுபவம் என்ன வென்று, தெரியாது. தோல்வி இல்லாமல் நமக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில், வெற்றியில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை கூட, நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியாது என்று கூட சொல்லலாம். நாம் ஒரு செயல்பாட்டை தொடங்கிய உடனே அதில் வெற்றி கிடைப்பதை விட, சில தோல்விகளை சந்தித்து, அதன் பின் வெற்றி கிடைப்பது தான் நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது. சொல்லப்போனால் பல தடைகளுக்கு பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய வெற்றிதான் நிலைத்திருக்கும். ‌இதை முதலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

perumal-1

லாபமும் நஷ்டமும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. ஏற்றத்தாழ்வுகளை ஏற்று வாழக்கூடிய பக்குவத்திற்கு முதலில் நாம் வரவேண்டும். அந்தப் பக்குவத்தை எப்படி பெறுவது? கட்டாயம் இறைவனின் வழிபாட்டின் மூலமாக தான் நம்முடைய மனம் பக்குவப்படும் என்பதில் சந்தேகமே கிடையாது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், சோர்வடையாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி வாகை சூட தினசரி வழிபாட்டை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த வழிபாட்டோடு சேர்த்து, நாம் தொடங்கக்கூடிய காரியம், 100% வெற்றி அடைய ஒரு சூட்சும பரிகாரத்தையும் இந்த பதிவின் இறுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இந்த புரட்டாசி மாதத்தில் காலை வேளையில் எழுந்து எப்போதும் போல குளித்து சுத்தமாகி விட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, துளசி இலைகளால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யும்போது பின்வரும் மந்திரத்தை உச்சரிப்பது நம்முடைய மன வலிமையை அதிகரிக்கும். நம்முடைய மனம் பக்குவம் அடையும் உங்களுக்கான மன உறுதியை அதிகரிக்கச் செய்யும் மந்திரம் இதோ!

Perumal

ஓம் வெங்கடேசாய நம!
ஓம் சக்ரதராய நம!
ஓம் ஸ்ரீநிவாஸாய நம!

- Advertisement -

பெருமாளின் இந்த நாமங்களை உச்சரித்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும் போது தீராத கஷ்டங்களும் தீரும். இதுவரை தோல்வியை மட்டுமே உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருந்தால் இனி வரப்போகும் காலம் வெற்றிகரமாக மாற, எம்பெருமானின் அருளாசியை முழுமையாக பெற இந்த பூஜை உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். தினம்தோறும் மந்திரத்தைச் சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். நல்ல பலன் உண்டு.

Perumal

இதோடு சேர்த்து, மற்றொரு சூட்சுமத்தையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, உங்களது நாசியில் எந்தப் பக்கத்திலிருந்து சுவாசம் வருகின்றது என்பதை கவனிக்க வேண்டும். வலது பக்க நாசியில், சுவாசம் இருந்தால், அதாவது மூச்சுக்காற்று வெளிவரும் பட்சத்தில் வலது காலை முதலில் வெளியே வைக்க வேண்டும்.

perumal

இடது பக்க நாசியில் இருந்து மூச்சு காற்று வரும் பட்சத்தில் இடது காலை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். அதாவது நில வாசற்படியை நீங்கள் தாண்டும் பொழுது கால் வைப்பதை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி வெளியே செல்லும் பட்சத்தில், முடிந்தால் ஒரு துளசி இலையையோ அல்லது அருகம்புல்லையோ உங்கள் பாக்கெட்டிலோ, பர்ஸ்ஸிலோ வைத்து எடுத்துக் கொண்டு சென்றால், நீங்கள் எதை நினைத்துக் கொண்டு வெளியில் செல்கிறீர்களோ அந்த காரியம், நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான் என்ற இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எதிரிகள் இனி உங்கள் பக்கம், தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள். எதிரிகளை ஓட ஓட விரட்ட கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.