குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வழிபாடு

perumal valipadu
- Advertisement -

தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தை பிறப்பதற்கு முன்பே சேமித்து வைக்கும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். பணத்தை மட்டும் சேமித்து வைத்தால் போதுமா? அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் இருக்கிறது அல்லவா? அப்படி இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் சிறப்பாக பெறுவதற்கு திருவோண நட்சத்திரமான நாளை பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பெருமாளுக்குரிய நட்சத்திரமாக திருவோண நட்சத்திரம் திகழ்கிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாளாக திகழ்கிறது. அதேபோல் மார்கழி மாதமும் பெருமாளுக்கு உரிய மாதமாக திகழ்கிறது. திருவோண நட்சத்திரம் இன்று மாலையிலிருந்து நாளை மாலை வரை இருக்கிறது. ஆக பெருமாளுக்குரிய மாதத்தில் பெருமாளுக்குரிய நாளில் பெருமாளுக்குரிய நட்சத்திரத்தில் பெருமாளை நினைத்து நாம் வழிபாடு மேற்கொண்டால் எவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கக்கூடிய வாக்கியத்தில் ஒன்றுதான் நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பது.

- Advertisement -

நாளைய தினம் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் இட்டு அவருக்கு மிகவும் பிடித்தமான துளசியை பறித்து வைக்க வேண்டும். இயன்றவர்கள் துளசியை மாலையாக சாற்றலாம். அடுத்ததாக அன்றைய நாள் முழுவதும் அவரை நினைத்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உப்பு போடாமல் சாப்பிட வேண்டும்.

பச்சரிசியை உப்பு போடாமல் வேகவைத்து சாதமாக வடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு வாழை இலையில் வைத்து அதற்கு நடுவில் சிறிதாக பள்ளம் செய்து அதில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் ஒரு வாழைப் பழத்தையும் பிணைந்து வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். இந்த நெய்வேத்தியத்தை மதிய வேளையில் தாங்களும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களும் பிரசாதமாக உட்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மதியம் அந்த உப்பு போடாத பச்சரிசி சாதத்தை தான் சாப்பிட வேண்டும். இரவு உப்பு போடாமல் ஏதாவது ஒரு கஞ்சியை செய்து சாப்பிடலாம். இப்படி மாதந்தோறும் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளன்று உப்பு போடாமல் சாப்பிட்டு விரதம் இருப்பவர்களுடைய குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். நல்ல படிப்பு, நல்ல வேலை, புத்திசாலித்தனம், திறமை வெளிப்படுதல் என்று அனைத்திலும் சிறப்பாக இருப்பார்கள்.

ஞானத்தில் சிறந்து விளங்கக்கூடிய புதன் பகவானின் அதி தேவதையாக திகழக்கூடியவர் பெருமாள் என்பதால் புதன் பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் பெருமானின் மார்பில் நித்திய வாசம் செய்யும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். குழந்தைகளின் வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடு

பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் பிள்ளைக்கு வரும் என்ற ஒரு கூற்று இருக்கிறது. பாவம் செய்தால் பாவமும் புண்ணியம் செய்தால் புண்ணியமும் குழந்தைகளுக்கு கிடைக்கும். அந்த வகையில் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு தங்கள் குழந்தையின் வாழ்க்கையை சிறப்படையச் செய்யலாம்.

- Advertisement -