நீங்களே எதிர்பாராத மிகப்பெரிய திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமா? புரட்டாசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய வீட்டில் பெருமாளுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்.

perumal

புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத முன்னேற்றத்தையும் அள்ளி அள்ளி தருபவர் எம்பெருமான். ஆடம்பரத்தையும் செல்வ வளத்தையும் அதிகப்படியாக விரும்பும் எம்பெருமானை, வழிபடுபவர்களுடைய வாழ்க்கையும் நிச்சயம் செல்வ செழிப்போடு தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

perumal1

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லோரது மனதிலும், வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கும். நாம் இருக்கின்ற நிலையில் இருந்து, விரைவாக பொருளாதார ரீதியான, நிறைவான முன்னேற்றத்தை அடைவதற்கு பெருமாள் வழிபாடு நிச்சயம் கைகொடுக்கும் என்ற பிரார்த்தனையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

பெருமாளுக்கு சில பேர் வீடுகளில் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும். மாவிளக்கு ஏற்றும் பழக்கம் இல்லாதவர்கள் கூட, இந்த வழிபாட்டை செய்து பலனடையலாம். உங்களுடைய வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பெருமாள் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், இந்த வழிபாட்டை செய்வது கைமேல் பலனை கொடுக்கும். தாயாரோடு சேர்ந்த பெருமாளின் படம் உங்களுடைய வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும்.

perumal-1

இந்த வழிபாட்டிற்கு ஒரு மண் அகல் தீபத்தை புதியதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல பச்சரிசியையும் புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு, அந்த தாம்பூலத் தட்டில் பச்சரிசியை கொஞ்சமாக பரப்பிவிட்டு, அதன் மேல் மண் அகல் தீபத்தை பச்சரிசியின் மேல் வைத்து, அந்த தீபத்திற்கு மஞ்சள் குங்குமத்தை இட்டு, சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி பெருமாளை மனதார நினைத்து ‘கோவிந்தா’ மந்திரத்தை உச்சரித்து மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

புரட்டாசி மாத சனிக்கிழமையில் இந்த வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இருப்பினும் நான்கு வார புரட்டாசி சனிக்கிழமைகள் நிறைவடைந்து விட்டது. உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று, புரட்டாசி மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்தாலும் நமக்கு நிச்சயம் பலன் இருக்கும் என்ற நம்பிக்கையோடு வழிபாட்டை செய்யுங்கள்.

pachcharisi

புரட்டாசி மாதத்தில் இந்த வழிபாட்டை செய்வதற்கான சூழ்நிலை உங்களுக்கு அமையவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் தொடர்ந்து 7 வாருங்கள் மனதார உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.

deepam

நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றங்கள் ஏற்படும். நீங்களே எதிர்பாராத நன்மைகள் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும். நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து உங்களுடைய வாழ்க்கைத் தரம் படிப்படியாக நிச்சயம், குறிப்பிட்ட நாட்களுக்குள் உயரத் தொடங்கும். உங்களுடைய வீட்டில் செல்வ வளத்திற்கு எந்த ஒரு குறைபாடும் வராமல் இருக்க இந்த வழிபாடு கை மேல் பலன் தரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் மருதாணியை இப்படி இட்டுக் கொண்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க! இப்படி மருதாணி வைத்துக் கொள்ளும் பெண்கள் மகாலட்சுமி சொரூபமாகவுப் மாறிடுவாங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.