நீங்கள் விரும்பிய காரியங்கள் நடக்க, புகழ் பெற இக்கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்

patteeswaran-sivan

சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பது பழமொழி. பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவுமாக சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் அனைத்து துயரங்களையும் போக்கும் தெய்வமாக நாடெங்கும் பல கோயில்களை கொண்டிருக்கிறார். அப்படியான ஒரு கோயில் தான் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் மேலும் பல சிறப்புக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

siva-parvathi

அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் பட்டீஸ்வரர் எனவும், அம்பாள் பச்சைநாயகி, மனோன்மணி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக புளியமரம் மற்றும் பனைமரம் இருக்கின்றன.

புராணங்களின் படி படைப்பு தொழிலை செய்யும் வரம் வேண்டி இங்கு தவம் இருந்த தேவலோக பசுவான காமதேனு தினமும் இங்கு புற்று வடிவில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது. ஒருமுறையின் காமதேனுவின் கன்றான “பட்டி” கால் குளம்பு புற்று சிவலிங்கம் மீது பட்டு சேதம் ஏற்பட்டது. இதை கண்ட காமதேனு தனது கன்றுக்குட்டியின் செயலுக்கு சிவபெருமானிடம் மன்னிப்பு கோரியது.

Siva Lingam

அப்போது காமதேனுவின் முன்பு தோன்றிய சிவபெருமான் பட்டி தனது கால்களால் தனது லிங்கமேனியை மிதித்ததை தாம் மகிழ்வுடன் ஏற்பதாகவும், இந்த தலம் முக்தி தரும் தலமாகியதால் காமதேனுவின் படைப்பாற்றல் வரத்தை தாம் திருக்கருகாவூரில் காமதேனுவுக்கு தருவதாகவும். காமதேனுவின் நினைவாக இந்த ஊர் காமதேனுபுரம் என்றும், அதன் கன்றான பட்டி பெயரால் பட்டீஸ்வரம் என்றும், எனக்கு பட்டீஸ்வரர் என்கிற பெயரும் உண்டாகும் என சிவபெருமான் வரம் தந்தருளினார்.

- Advertisement -

அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில் சிறப்புகள்

பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கோயிலாக பட்டீஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. சிவாலயங்களில் நடராஜர் ஆடும் நிலையில் இருக்கும் வடிவங்களையே நாம் வழிபடுவோம் ஆனால் ஆடி முடிக்கும் நிலையில் இருக்கும் நடராஜ பெருமானை இக்கோயிலில் நாம் தரிசிக்கலாம். இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோர்களுக்கு ஆனந்த தாண்டவ நடராஜ தரிசனத்தை சிவபெருமான் வழங்கினார்.

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் திருவாதிரை விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால் இந்த கோயிலை “மேலைச்சிதம்பரம்”. இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது காமதேனு பசுவின் கால் குளம்புகள் படிந்துள்ளதை இன்றும் நாம் காண முடியும். அம்பாள் பச்சைநாயகி அம்மனுக்கும்,மனோன்மணி அம்மனுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. பச்சை நாயகி அம்மனின் சந்நிதி சதுர வடிவில் இருக்கிறது.

இக்கோயிலை தரிசிப்பவர்களுக்கு முக்தி தரும் தலமாக இருப்பதால், இங்கு நாய் வாகனம் இல்லாமல் பைரவர் அருள்புரிகிறார். அம்மன் சந்நிதிக்கு வெளியே வரதராஜ பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான ஆஞ்சநேயரும் அருள் புரிகின்றனர். ஆதிசங்கரர் இங்குள்ள சிவபெருமானை மறைந்த தனது தாய்க்கு முக்தி தர வேண்டி வழிபட்டுள்ளதாக கூறுகிறார்கள். இக்கோயிலிலுள்ள பனைமரம் இறவா பனைமரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முன்பு பிறவாப்புளி என்கிற புளியமரம் இருக்கிறது. இப்புளியமரத்தின் விதைகளை வேறு எங்கு விதைத்தாலும் அவை முளைப்பதில்லை என்பது ஒரு அதிசயமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

Siva lingam

இங்கே இறப்பவர்கள் காதில் சிவபெருமானே நமசிவாய மந்திரத்தை ஓதி முக்தி பேற்றை அருளுவதால் இப்பகுதியில் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் வலது புற காது மேலே இருக்கும் படி வைக்கின்றனர். இப்பகுதியில் பசுக்கள் இடும் சாணத்தில் கூட புழுக்கள் இருப்பதில்லை என்பது ஆன்மீக அதிசயமாக இருக்கிறது. இப்பகுதிக்கு அருகே இருக்கும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கும் பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், இந்த நதியில் இறந்தவர்களின் எலும்பை போட்டால் அது வெண்கற்களாக மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது. மிகுந்த புகழ் பெறவும், நினைத்த காரியங்கள் நடைபெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பேரூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்
பேரூர்
கோயம்புத்தூர் மாவட்டம் – 641010

தொலைபேசி எண்

422 – 2607991

இதையும் படிக்கலாமே:
திருமண தடை நீங்க, சுமங்கலி பாக்கியம் பெற இக்கோயில் செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Perur patteeswarar temple in Tamil. It is also called as Arulmigu patteeswarar swamy temple in Tamil or Patteeswaram temple perur in Tamil or Patteeswarar swamy kovil in Tamil or Pateeswarar koil varalaru in Tamil.