திருமண தடை நீங்க, தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற இக்கோயிலுக்கு செல்லுங்கள்

ponoor-sivan

மனிதன் என்பவன் தனித்து வாழ படைக்கப்பட்டவன் அல்ல. நமது முன்னோர்களின் கருத்து படி திருமண பருவத்தை அடைந்த ஒரு ஆண், ஒரு ஆகிய இருவரும் திருமணம் செய்து இல்லற வாழ்வு மேற்கொண்டு, அறம் செய்ய வேண்டும் என்பதாகும். இப்படி இல்லற வாழ்வில் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரியும் “பொன்னூர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில்” சிறப்புக்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nanda-sivan-viratham

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் வரலாறு

1500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான சிவபெருமான் ஆபத்சகாயேஸ்வரர் என்றும், அம்பாள் பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலமாக இருக்கிறது. முற்காலத்தில் இந்த ஊர் திருஅன்னியூர் என்று அழைக்கப்பட்டது.

கோயில் தல புராணங்களின் படி தாரகன் எனும் அரக்கனை அழிக்க சிவபெருமானின் தவத்தை கலைக்க விரும்பிய தேவர்கள் மன்மதன் உதவியை நாடினர். மன்மதனும் தேவர்களின் சொற்படி சிவனின் தவத்தை கலைத்த போது, சிவனின் நெற்றிக்கண் அக்னியில் மன்மதன் அழிந்து போனான். இதை அறிந்து கலங்கிய மன்மதனின் பத்தினியான ரதி, இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானை வணங்க மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அவ்விருவருக்கும் தனது தரிசனத்தை தந்தருளினார்.

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சிறப்புகள்

இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இந்த தலத்தில் சிவன் அக்னி அம்சத்தில் இருப்பதாக ஐதீகம். அதனால் சிவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு. பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சூரியனின் ஒளி கதிர்கள் சிவனின் மீது படுவது ஒரு விஷேஷ நிகழ்வாக கருதி வணங்குகிறார்கள். தங்கள் பரம்பரையின் மறைந்த முன்னோர்கள் ஆத்ம சாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு வந்து இறைவனை வேண்டிக்கொள்கின்றனர்.

- Advertisement -

Sivan lingam

ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திர தினத்தில் திருமண தடை உள்ள பெண்கள் இங்கு அம்பாளுக்கு வளையல் சாற்றி வழிபாடு செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதாக கூறப்படுகிறது. இங்கு ரெட்டை தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. இந்த தட்சிணாமூர்த்தியை வணங்குவதால் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பதாக கூறுகிறார்கள். பெண்கள் தங்கள் எப்போதும் தீர்க்க சுமங்கலியாக இருக்க இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி, தயிர் சாதம் படைத்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் இருக்கும் பொன்னூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
பொன்னூர்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் – 609203

தொலைபேசி எண்

4364 – 250758

4364 – 250755

இதையும் படிக்கலாமே:
அப்பலயகுண்ட கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Abathsahayeswarar temple details in Tamil. It is also called as Abathsahayeswarar temple aduthurai in Tamil or Abathsahayeswarar kovil in Tamil or Nagapattinam temples Tamil or Abathsahayeswarar ponoor in Tamil.