இந்தத் தவறுகளை நாம் செய்வது, மகாலட்சுமியை நாமே, கையைப் பிடித்து, நம் வீட்டை விட்டு வெளியில் கொண்டுபோய் விடுவதற்கு சமமாகிவிடும்.

lakshmi-cash

நம்முடைய வீட்டில் நாம் அறியாமல் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட, மகாலட்சுமியை வீட்டில் தங்க விடாமல் செய்து விடும். நாம் செய்யக்கூடிய இந்த தவறுகளின் மூலம், நாமே மாகாலட்சுமி தாயாரை இழுத்துக்கொண்டு போய், வீட்டு வாசலுக்கு வெளியில் விடுவதற்கு சமமாக சொல்லக்கூடிய சில தவறுகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பல கோடீஸ்வரர்கள் வெகு சீக்கிரத்திலேயே, தெருக்கோடியில் நின்றதற்கு இந்த தவறுகளும் ஒரு காரணம்தான். கடகடன்னு சம்பாதித்து, கடகடன்னு பணக்காரனாய் ஆகியிருப்பாங்க! பார்த்தீங்கன்னா, ஒரே பிரச்சனை அவர்களை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கும். காரணம் அவர்கள் செய்யக்கூடிய இப்படிப்பட்ட தவறுகள் தான்.

sleep

ஒரு வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் சூரிய உதயத்தின் போதும், சூரிய மறைவின் போதும் கட்டாயமாக தூங்கிக் கொண்டிருக்க கூடாது. இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அது எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண் காலை 6 மணி அளவில் கண்விழித்து எந்திரிக்க வேண்டியது அவசியம்.

இருப்பினும் நவ நாகரீகம் என்று சொல்லப்படும் இந்த காலத்தில் காலை 6 மணிக்கு பெண்கள் கண்விழிப்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் எந்த வீட்டில் பெண்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்.

sad-crying

இரண்டாவதாக, பார்ப்பதற்கு நல்லா பெரிய பணக்காரங்கலா இருப்பாங்க. பங்களா இருக்கும், கார் இருக்கும், சமைக்க, வீட்டை சுத்தம் செய்ய வேலையாட்கள் இருப்பார்கள். நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நிறைவான வாழ்க்கை தான் அது. ஆனால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி வெளியாட்களிடம் என்ன சொல்லுவார்கள்? இவ்வளவு சொத்து இருந்தும் என்ன பயன்? நிம்மதியே இல்லை. இந்த ஒரு வார்த்தை ‘நிம்மதியே இல்லை’ என்று அவர்கள் சொல்லக்கூடிய அந்த வார்த்தை அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நிம்மதியை நிலை குலைத்துவிடும்.

- Advertisement -

அபத்தமான கெட்ட வார்த்தைகளைப் பேசினால் தான், வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போய் விடுவாள் என்பது ஒரு பக்கம் இருக்க, எப்போது பார்த்தாலும் பெருமூச்சு விட்டுக் கொண்டு, வீட்டில் நிம்மதியே கிடையாது, மனசு சந்தோஷமாக இல்லை, காசு இருந்தும் என்ன பயன், இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துபவர்களது வீட்டிலும் மகாலட்சுமி நிம்மதியாக இருக்க மாட்டாள்.

curd

இரவு நேரத்தில் கெட்டித் தயிர், கஞ்சி, இஞ்சி, கீரை, நெல்லிக்கனி, பாகற்காய் இந்த பொருட்களை சாப்பிடபவர்களது வீட்டிலும் மகாலட்சுமி நிச்சயம் நிரந்தரமாக தங்க மாட்டாள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

old-age-people

வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தவர்கள் அதாவது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இப்படியாக மூத்த சந்ததியினரை எடுத்துக்கொள்வோம். அவர்களுடைய மனது எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. அவர்கள் மனம் நொந்து மனம் குமுங்கி, அவர்கள் அடுத்தவர்களை திட்டிக் கொண்டே இருக்கக்கூடாது. இப்படியாக வீட்டில் உள்ள வயதானவர்கள் வருத்தப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் அந்த வீட்டில் நிச்சயம் மகாலட்சுமி நிலைத்திருக்க மாட்டாள்.

old people

உங்களுடைய வீட்டில் உங்களது தாய் தந்தை, தாத்தா பாட்டி, யார் இருந்தாலும் அவர்களை மன நிம்மதியோடு மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளப் பாருங்கள். நீங்கள் வயது முதிர்ந்தவர்கள் ஆக தாத்தா பாட்டியாக இருந்தாலும் சரி, அம்மா அப்பா ஸ்தானத்தில் இருந்தாலும் சரி, இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வயது முதிர்ந்த நிலைக்கு செல்லப் போகும் இளைஞர்களாக இளைஞர்களாக இருந்தாலும் சரி, கஷ்டம் வரும் சூழ்நிலையிலும் உங்களுடைய பிள்ளைகளை, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சபிப்பது, திட்டுவது, மனம் நொந்து பேசுவது, சாபம் கொடுப்பது, நொந்து போய் கண் கலங்குவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகள் நம்முடைய அடுத்த சந்ததியினரை தொடர்ந்து பாதிக்கும் அளவிற்கு பேராபத்து உடையது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்ட லட்சுமிக்கே உங்கள் பீரோவில் நிரந்தரமாக தங்க ஆசை வந்துவிடும். இந்த ஒரு படத்தை, உங்கள் வீட்டு பீரோவில் ஒட்டி வைத்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.