விநாயகருக்கு பிடித்த பிடி கொழுக்கட்டையை சுலபமாக செய்வது எப்படி?

pidi-kozhukattai
- Advertisement -

வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு சில வீடுகளில் பிடி கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பிடி கொழுக்கட்டை மாவை சிறு உருண்டையாக பிடித்து, பிள்ளையார் உருண்டை என்றும் நெய்வேத்தியம் செய்வார்கள். இந்த இனிப்பு கொழுக்கட்டையை எப்படி சுலபமாக, சுவையாக செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலபேர், வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இந்த கொழுக்கட்டையை 21, 51, 101, 108 என்ற கணக்கில் செய்து கோவிலுக்கு சென்று இறைவனுக்கு படைத்து பிரசாதமாக எல்லோருக்கும் கொடுப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

arisimavu

Step 1:
இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் இருந்து வாங்கும் கொழுக்கட்டை மாவு, இடியாப்பம் மாவு எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். கொழுக்கட்டை செய்வதற்கு முன்பாகவே அந்த மாவை கடாயில் போட்டு, மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு இப்போது கடையிலிருந்து எந்த மாவும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, அந்த பச்சரிசியை காட்டன் துணியில் பரப்பி ஃபேன் காற்றில் ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும்.

arisimavu1

ஈரம் அரிசியிலிருந்து நன்றாக வற்றிய பின்பு, அந்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை கடாயில் போட்டு மிதமான தீயில் வைத்து ஈரப்பதம் போகும் அளவிற்கு 3 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வறுத்த மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக பச்சரிசி மாவில் இருந்து 1 கப் அளவு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பச்சரிசி மாவு – 200 கிராம், வெல்லம் – 150 கிராம். வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர். அதாவது சரியாக சொல்லப்போனால் வெல்லத்தை தூள் செய்து ஒரு கப்பில் அளக்க வேண்டும். அதே கப்பில் தண்ணீர் அளந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

vellam

அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வெள்ளத்தை கரைத்துக் கொள்ளவேண்டும். சுடு தண்ணீரில், ஒரு நிமிடத்தில் வெல்லம் கரைந்து விடும். அடுப்பிலிருந்து வெல்லத்தை கீழே இறக்கி, அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 3:
இப்போது அரிசிமாவும் தயாராக உள்ளது. வெல்லக் கரைசலும் தயாராக உள்ளது. செய்முறைக்கு செல்லலாம். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து முதலில் வெல்லக் கரைசலை ஊற்றி, அந்த வெள்ளைக் கரைசலில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை உப்பு, வாசனைக்கு ஏலக்காய் பொடி, இவைகளை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். (வெள்ளத்தின் பச்சை வாடை போனால் மட்டும் போதும்.)

pidi-kozhukattai2

அதன் பின்பாக தேங்காய் துருவலை ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். கடித்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சில பேர் இதில் வறுத்த கடலைப் பருப்பை கூட சேர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் துருவலை சேர்த்த பின்பு, தயாராக வைத்திருக்கும் அரிசி மாவையும், வெல்லக் கரைசலுடன்  சேர்த்து கை விடாமல் மிதமான தீயில் கிளற ஆரம்பிக்கவேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்குள் இந்த மாவு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வந்துவிடும்.

pidi-kozhukattai1

Step 4:
அடுப்பிலிருந்து இந்த மாவை, கீழே இறக்கி வைத்துவிட்டு, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், கையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பிடி கொழுக்கட்டை பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதும். சுவையான பிடி கொழுக்கட்டை தயார் ஆகிவிடும். இந்த மாவை உருண்டையாகவும் பிடிப்பார்கள் அது அவரவர் இஷ்டம் தான்.

இந்த கொழுக்கட்டை மாவை செய்யும் போது, உங்களுக்கு மாவு கொஞ்சம் நீர்த்து விட்டால் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும், நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த மாவில் சேர்த்து கிளறிக் கொண்டால் பக்குவம் சரியாகிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும், இந்த விநாயகர் சதுர்த்திக்கு, இந்த கொழுக்கட்டையை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
அட! பால் கொழுக்கட்டை செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! பிள்ளையாருக்கு பால் கொழுக்கட்டையும் ரொம்ப பிடிக்கும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -