பிக்மண்டேஷனை குறைக்க, முகத்தை உடனடியாக பொலிவாக மாற்ற இதுதான் சூப்பர் ஐடியா. இப்போதான் முகத்தில் சின்ன சின்ன கருப்பு புள்ளிகள் வருவது போல தெரிந்தாலும் உடனே இதை படிங்க.

face21
- Advertisement -

முகத்தில் ஆங்காங்கே கருப்பான புள்ளிகள் முதலில் லேசாக வரத் தொடங்கும். பிறகு அந்த புள்ளிகள் எல்லாம் சேர்ந்து பிக்மென்ட்டேஷன், ஹைப்பர் பிக்மென்ட்டேசன் ஆக மாறிவிடும். இது முகத்தின் அழகை அப்படியே குறைக்கும். இதை தமிழில் மங்கு என்று சொல்லுவோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இந்த மங்கு முகத்தில் வருவதற்கு என்ன காரணம். அதை சரி செய்ய நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு விரிவான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

முதலில் இந்த மங்கு எல்லோருக்கும் வருவது கிடையாது. ஒரு சில பேருக்கு மட்டுமே முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு முகத்தில் இந்த பிக்மென்டேஷன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் உங்களுக்கு மாதவிடாய் வருவதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதன் பிறகு மாதவிடாய் பிரச்சனையை சரி செய்தால்தான் முகத்தில் இருக்கும் மங்கு குறையும்.

- Advertisement -

அடுத்து அதிகப்படியான டிரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த மங்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிறுவயதில் முகம் ரொம்பவும் அழகாக இருக்கும். எண்ணெய் வடியக்கூடிய பிரச்சனை இருக்காது. ஆனால் 30 வயதை கடக்கும் போது அவர்களுக்கு இந்த மங்கு தானாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் கட்டாயம் அவர்களுடைய சருமத்தை பாதுகாக்க வேண்டும். எப்படி தெரியுமா‌.

ட்ரைஸ்கின் உள்ளவர்கள் தினமும் இரண்டு பாதாம் சாப்பிட வேண்டும். வால்நட்ஸ் சாப்பிட வேண்டும். அது மட்டும் அல்லாமல் இரவு தூங்க செல்லும் போது இரண்டு சொட்டு பாதாமாயிலை முகத்தில் தேய்த்து விரல்களால் லேசாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிட வேண்டும். மறுநாள் காலை முகத்தை கழுவிக்கொள்ளலாம். இது தவிர வாரம் தோறும் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இதுவும் சருமத்தின் வறட்சியை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் வாரம் ஒரு நாள் அவகாடோ, நெல்லிக்காய், தேன் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாக ரோஸ் வாட்டர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்து இதை பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து லேசாக ஸ்கிரிப் செய்து முகம் கழுவினாலும் முகம் டிரை ஆகாமல் இருக்கும்.

என்னுடைய முகத்தில் இருக்கும் மங்கு வை உடனடியாக குறைக்க வேண்டும். அந்த பிக்மென்ட்டேஷன் கண்ணுக்குத் தெரியாமல் குறைந்தால் தான் மேக்கப் போட்டு அழகாக மாற வேண்டும். இன்ஸ்டன்ட் ஆக ரிசல்ட்டு கொடுக்கும் ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்பவர்களுக்கும் ஒரு குறிப்பு. ஆனால், இந்த குறிப்பை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பு லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். இது சில பேருக்கு ஒத்துவரும். சில பேருக்கு ஒத்து வராது.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் தயிர் இருந்தா அத வச்சு இப்படி ட்ரை பண்ணி பாருங்க. இனி நீங்க எதுக்காகவும் பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியமே இருக்காது. இனி உங்க முடி, முகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்லிடலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பல் தேய்க்கும் வெள்ளை நிற பேஸ்ட் 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் போட்டு பேஸ்ட் போல கலந்து மங்கு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் உடனடியாக உங்கள் முகத்தில் இருக்கும் மங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது நிரந்தர தீர்வை. தராது அவசரத்திற்கு இந்த குறிப்பை பயன்படுத்தலாம். அடிக்கடி இந்த பேக்கை முகத்தில் போடக்கூடாது. தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலே சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -