ஒரு கப் தயிர் இருந்தா அத வச்சு இப்படி ட்ரை பண்ணி பாருங்க. இனி நீங்க எதுக்காகவும் பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியமே இருக்காது. இனி உங்க முடி, முகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்லிடலாம்.

lady curd
- Advertisement -

இப்போதெல்லாம் முகம், முடி இதையெல்லாம் அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது அழகு நிலையங்கள் தான். இந்த அழகு நிலையம் செல்லாமலே வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே நம்முடைய முகம் கழுத்து, கை, கால், தலைமுடி என அனைத்தையும் பராமரித்துக் கொள்ளலாம். அதுவும் இந்த தயிரை வைத்தே செய்யலாம். அது எப்படி என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தயிர் அழகு குறிப்புகள்
முதலில் இந்த தயிரை வைத்து தலை முடியை எப்படி பராமரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வெந்தய பவுடர் கூட பயன் படுத்தலாம். அத்துடன் அதிகம் புளிக்காத தயிரை சேர்த்து நல்ல பேஸ்ட் போல குழைத்து அதை நீங்கள் தலைமுடியில் பேக் போல போட்டு பத்து நிமிடத்திற்கெல்லாம் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை நன்றாக அலசி விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் நான்கு மிளகை தூள் செய்து அதையும் இந்த பேக்கில் சேர்த்து தலைக்கு போட்டுக் கொள்ளலாம். இந்த பேக் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து முடி உதிர்வை தடுத்து முடி வேகமாகவும் அதே நேரத்தில் மிருதுவாகவும் வளர வைக்க கூடிய அருமையான ஒரு பேக். தயிர் வெந்தயம் இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியவை இது இரண்டும் தலையில் உள்ள வெப்பத்தின் அளவை குறைத்து முடி வேகமாக வளர உதவும்.

அடுத்து இந்த தயிருடன் கடலைமாவை சேர்த்து முகத்திற்கு பேக்காக போடும் போது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருந்துட்டுகள் போன்றவை எல்லாம் காணாமல் போய் விடும். இத்துடன் முகத்தில் உள்ள முகப்பருக்களும் மறைவதுடன் முகம் நல்ல நிறத்துடன் மாற இந்த பேக் உதவி செய்யும்.

- Advertisement -

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு இந்த தயிருடன் முல்தானி மெட்டி, கொஞ்சம் கஸ்தூரி மஞ்சளையும் கலந்து இதை ஒரு பேஸ்ட் போல செய்து முகத்தில் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தால் போதும். முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெய் பசை குறைவதுடன் முகம் நல்ல பளிச்சென்று அழகாக மாறும்.

இதே போல இந்த தயிருடன் ஓட்ஸ் பவுடர் செய்து அந்த பவுடரும் தயிரையும் கலந்து பேக் போடும் போது இது முகத்திற்கு அதிகப்படியான நிறத்தை கூட்டிக் கொடுக்கும். இந்த பேக்குகளை நம்முடைய கழுத்து பகுதிகளில் போடும் போது கழுத்தில் உள்ள கருமை நிறம் கூட மறைந்து பளிச்சென்று மாறி விடும். அது மட்டும் இன்றி கை, கால், என உடம்பில் எங்கு கருமையாக மாறி இருந்தாலும் அந்த இடத்தில் எல்லாம் இந்த பேக்குகளை போட்டால் நிறம் மாறி விடும்.

- Advertisement -

இந்த தயிரை அடிப்படையாக வைத்து இத்தனை அழகு குறிப்புகளை நாம் செய்து கொள்ளலாம். தயிரில் இருக்கும் லாக்டிக் ஆக்சிடானது நம்முடைய சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவி செய்கிறது. இந்த பேக்குகளை எல்லாம் போடும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதிக அளவில் புளித்த தயிரை பயன்படுத்தக் கூடாது. அது மட்டும் இன்றி ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து குளுமையான தயிரை பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: தலையில கை வைத்தாலே உங்க முடி வேரோடு வருதா? அதுக்காக பதட்டபடாதீங்க உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த மூன்றே பொருள் போதும் முடி கொட்டுறதை உடனே நிறுத்திடலாம்.

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்து உங்களுடைய முழு உடம்பிற்கான அழகு பராமரிப்பை செலவில்லாமல் சுலபமாக செய்து கொள்ளலாம். இந்த அழகு குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பார்த்து உங்களுடைய அழகு நிலையம் செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -