முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளை அகற்ற இயற்கையான முறையில் செய்யக்கூடிய 5 எளிமையான குறிப்புகள்

black
- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஒரு சிலர் முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும், கரும்புள்ளிகளையும் அகற்ற வேதியியல் பொருட்களையும், க்ரீம்களையும் பயன்படுத்துவார்கள். அல்லது பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச் பேஷியல் போன்றவற்றை செய்து கொள்வார்கள். ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு பணம் அதிகமாக செலவழிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும். எனவே இவற்றைத் தவிர்த்து வீட்டிலேய இயற்கையான பொருட்களை வைத்து எளிமையான முறையில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றக்கூடிய 5 குறிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face

குறிப்பு: 1
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறைப் பிழிந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு காட்டனில் நனைத்து முகத்தில் தடவி ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, 15 நிமிடத்திற்கு அப்படியே காய விடவேண்டும். பிறகு குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி உள்ளதால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து, முகத்தில் இருக்கும் கருமை நிற மறைய உதவுகிறது. இதனைத் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

சிரிப்பு: 2
காய்ச்சிய பால் 2 ஸ்பூன் மற்றும் அதனுடன் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, முகத்தில் தடவி வட்ட முறையில் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளை அகற்ற முடியும்.

milk

குறிப்பு: 3
இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொண்டு அதனை முகத்தில் தடவி, வட்ட வடிவில் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, அதன் பின்னர் ஒரு மிதமான சூடுள்ள தண்ணீரில் காட்டன் துண்டை நினைத்து, முகத்தின் மீது போட வேண்டும். இந்தத் துண்டில் சூடு இருக்கும் வரை அதனை அப்படியே முகத்தில் வைக்க வேண்டும். பிறகு இந்த ஈரத்துணியை வைத்து முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் கருப்புத் திட்டு மறைய நல்ல பலன் கொடுக்கிறது.

- Advertisement -

குறிப்பு: 4
ஒரு வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொண்டு, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறை உங்கள் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய ஆரம்பிக்கும்.

cucumber

குறிப்பு: 5
வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய இதனை அனைவரும் ஈஸியாக செய்யலாம். சுடுதண்ணீர் வைத்துக்கொண்டு அதில் காற்று புகாத வண்ணம் பெட்ஷீட் அல்லது டில் போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியே வர ஆரம்பிக்கும். இதன் மூலம் கருமைதிட்டுக்களளும் மறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -