அடங்காத பிள்ளைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க, இந்த கற்றாழை தீபத்தை 11 வாரங்கள் ஏற்றி வந்தால் போதும்

alovera
- Advertisement -

சில வருடங்களுக்கு முன்பு வரை குழந்தைகள் பெற்றோர்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்து நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். வீட்டிற்கு வருகின்ற பெரியோர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற பிள்ளைகளோ பெற்றோர்களையும், பெரியோர்களையும் சரி வர மதிப்பதில்லை. சில குழந்தைகள் அவர்களை எதிர்த்து பேசுகின்றனர். மிகவும் கோபப்படுகின்றனர். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பெற்றோர்கள் செய்துவிட்டால் போதும் சிலர் வீட்டை விட்டு வெளியேறி விடுவோம் இன்றும் கூட கூறி பெற்றோர்களை பயமுறுத்தி விடுகிறார்கள். அவ்வாறு இன்றைய குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வது என்றே புரியவில்லை. சில குழந்தைகள் படிக்க சொன்னாலே முரண்டு பிடிக்கிறார்கள். தாய், தந்தை இருவரின் பேச்சையும் கேட்பதில்லை. அவர்கள் நடவடிக்கை சற்றும் சரியில்லாமல் போய்விடுகிறது. இவ்வாறான குழந்தைகளை இந்த வயதிலேயே சரி படுத்தாமல் விட்டுவிட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். எனவே குழந்தைகளின் நிலையை சரிசெய்து, அவர்கள் பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடக்க இந்த கற்றாழை தீபத்தை ஏற்றி வழிபட்டு வர அனைத்தும் சரியாகிவிடும்.

முன்பெல்லாம் பெற்றோர்களிடம் பயம் இல்லாத குழந்தைகள் கூட ஆசிரியர்களைக் கண்டு மிகவும் பயந்து, பணிவுடன் நடந்து கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை பற்றிய பிரச்சனைகளை ஆசிரியர்களிடம் கூறி தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவை தேடிக் கொள்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களை வைத்து ஆசிரியர்களுக்கு அறிவுரை சொல்ல வைக்கிறார்கள்.

- Advertisement -

பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் அவர்களின் பிள்ளைகளை அடிக்கக்கூடாது, திட்டக் கூடாது என்று சொல்லிவிட்டு வருகிறார்கள். அதையும் மீறி ஆசிரியர்கள் கண்டித்தால் காவல் நிலையத்திலும் அவர்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். அந்த அளவிற்கு இன்றைய காலகட்டம் வெகுவேகமாக குழந்தைகளை தீய வழிகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

எனவே இது போன்ற விஷயங்களையும் ஆன்மீக முறைப்படி நம்மை கட்டுப்படுத்த முடியும். எவ்வாறு நமது வீட்டில் ஏற்றி வைக்கும் தீபம் வீட்டில் உள்ள இருளை நீக்கி, வெளிச்சத்தை கொடுக்கிறதோ, அதுபோல இந்த கற்றாழை தீபமும் குழந்தைகளின் உள்ளத்தில் இருக்கும் இருளை அகற்றி, நல்ல அறிவையும், ஒழுக்கத்தையும் வர வைக்கிறது.

- Advertisement -

எனவே இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முதலில் இரண்டு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தாம்பூலத்தட்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இவை இரண்டிற்கும் மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தாம்புல தட்டில் இரண்டு அகல் விளக்கையும் தாம்பூல தட்டில் மீது வைத்து விட வேண்டும்.

பின்னர் இரண்டு விளக்குகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்ததாக இரண்டு தீபங்களின் பின்புறங்களிலும் மலர்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் இவை இரண்டு விளக்குகளுக்கும் இடையே ஒரு கற்றாழை கிளையை வைத்துவிட வேண்டும். பின்னர் இரண்டு தீபத்தையும் ஏற்றி அந்த தீப ஒளி கிழக்கு திசை நோக்கி அல்லது வடக்கு திசை நோக்கி எரியும்படி வைத்துவிட வேண்டும். பின்னர் கண்களை மூடி மனமுருக உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டும். எனது பிள்ளைகள் நான் சொல்லும் பேச்சை கேட்க வேண்டும், அவர்கள் ஒழுக்கத்துடன், பணிவுடன் இருக்கவேண்டும் என்று மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து 11 வாரங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்து வரலாம்.

- Advertisement -