நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் ஸ்லோகம்

pillayarl

இந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கிறார் விநாயக பெருமான். கணங்களுக்கு அதிபதியான கணபதியை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. விக்னங்களை தீர்ப்பதாலேயே இவருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயரும் உண்டு. அந்த வகையில் பிள்ளையாரை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய இந்த அழகிய தமிழ் மந்திரம் அதை கூறுவதன் பயனாக நமது பிறவி துன்பம் உட்பட அனைத்து துன்பங்களும் சூரியனை கண்ட பனி போல விலகும்.

vinayagar

விநாயகர் சுலோகம்:

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

இதையும் படிக்கலாமே:
நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற உதவும் துர்கை மந்திரம்

பொருள்:
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியை நாம் இருகரம் கூப்பி வணங்குவதன் பயனாக நம் வாழ்வில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகும். துன்பங்கள் யாவும் தொலைந்து போகும். பிறவிகள் அனைத்திலும் நம்மை தொடர்ந்த துன்பங்கள் யாவும் விலகும். நமக்குள் நல்ல குணமானது அதிகரித்து அதனால் நன்மைகள் பல தழைத்தோங்கும்.