ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடுதான் கோவில். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. பணம் காசு கொஞ்சம் கூட, குறைய இருந்தால் கூட வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி விடலாம். ஆனால் கண் திருஷ்டியால், காத்து கருப்பு சேட்டையால், குடும்பத்தின் நிம்மதி எந்த நாளிலும் நிலை குலைந்து போகக்கூடாது.
அதற்காக செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருக்கு ஏவல் பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய எதிர்மறை ஆற்றலினால் கூட பாதிப்புகள் இருக்கலாம், அல்லது பயம் இருக்கலாம். அந்த பாதிப்பில் இருந்தும், அந்த பயத்திலிருந்தும் வெளி வருவதற்கு கூட இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் நல்ல பலனை கொடுக்கும்.
கெட்ட சக்தி விலக பரிகாரம்
முதல் பரிகாரமாக விநாயகரது பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகரது வழிபாடு நமக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கொடுக்கும். அதேபோலத்தான் இந்த காத்து கருப்பு ஏவல் பில்லி சூனியம் பிரச்சனையிலிருந்து விடுபடவும் இந்த எளிமையான வழிபாடு கை கொடுக்கும். விநாயகருக்கு உகந்தது அருகம்புல். அதை ஒரு கட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி, விநாயகரை வணங்கவும். அந்த விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் ஆபத்சகாய கணபதியே போற்றி போற்றி’ என்ற விநாயகரது இந்த மந்திரத்தை சொல்லி 108 முறை அந்த அருகம்பள்ளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அர்ச்சனை செய்த இந்த அருகம்புல்லை எல்லாம் எடுத்து ஒரு சிவப்பு நூலிலோ, அல்லது கருப்பு நூலிலோ கட்டி நிலை வாசலில் தொங்க விடுங்கள்.
எந்த ஒரு ஆபத்தும் உங்கள் வீட்டின் நெருங்காது. வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் வீட்டைவிட்டு தெரிந்து ஓடிவிடும். கெட்ட எண்ணத்தோடு யாராவது உங்கள் வீட்டிற்குள் வரவேண்டும் என்று நினைத்தால் கூட வீட்டிற்குள் நுழைய முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு கவசமாக இந்த அருகம்புல் இருக்கும். தினமும் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு.
முடியாதவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது பழைய அருகம்புல்லை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புது அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்து, அந்த அருகம்புல்லை நூலில் கட்டி, நிலை வாசலில் மாட்ட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் பிரச்சனை ரொம்பவும் பெரிய அளவில் இருக்கிறது என்னென்னவோ பரிகாரமும் செய்து பார்த்து விட்டோம். ஆனால் வீட்டில் நிம்மதி இல்லை.
ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது, இதற்கெல்லாம் ஏதோ ஒரு கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் உணர்ந்துவிட்டால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள். தினமும் இந்த விநாயகரது நாமத்தை வீட்டில் உச்சரிக்கும் போது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தெறித்து ஓடிவிடும்.
இதையும் படிக்கலாமே: குடும்ப சந்தோஷத்திற்கு பரிகாரம்
உங்கள் வீடு கோவிலாக மாறும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எந்த கெட்ட சக்தியும் உங்களை துன்புறுத்த வீட்டிற்குள் நெருங்க முடியாது. அற்புதமான இந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மன நிறைவுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.