ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தில் நிம்மதி நிலவ வேண்டும். அதை தவிர்த்து விட்டு சதா சர்வ காலமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் எந்தவித மகிழ்ச்சியும் ஏற்படாது. மேலும் இந்த பிரச்சனைகளோடு பணப்பிரச்சனையும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் நிம்மதி இல்லாத சூழ்நிலை என்பது உண்டாக்கிவிடும். இந்த நிம்மதி இல்லாத சூழ்நிலையை மாற்றுவதற்கும் பணப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் சண்டை சச்சரவுகள் அற்ற நிலையை ஏற்படுத்துவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நிம்மதியான வாழ்க்கை அமைய
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்றால் அதற்கு தெய்வத்தின் அருள் வேண்டும். அதிலும் குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு அதீத பலனை தரும்.அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது.பெண் தெய்வ வழிபாட்டிற்கு சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது தான் வெள்ளிக்கிழமை தான். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலம் என்பது நம் கஷ்டங்களும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்குரிய காலம் ஆகும்.அதனால் தான் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் வழக்கத்தை பின்பற்றுகிறோம். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று இந்த ஒரு பொருளை மட்டும் நாம் வாங்கிக் கொடுப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும்.
இந்த பொருளை அபிஷேகத்திற்காக தான் நாம் வாங்கி தர வேண்டும். அம்மனுக்கு அபிஷேகத்திற்காக நாம் வாங்கி தர வேண்டிய பொருள்தான் குங்குமம். குங்குமத்தை தானமாக தருவதற்கு பதிலாக அர்ச்சனைக்கு தருவதற்கு பதிலாக அபிஷேகத்திற்காக என்று குறிப்பிட்டு வாங்கி தர வேண்டும். முடிந்தவரை அங்கிருந்து குங்கும அபிஷேகத்தை பார்ப்பதன் மூலமும் நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இந்த பொருளை கண்டிப்பான முறையில் வெள்ளிக்கிழமை அன்றுதான் வாங்கி தர வேண்டும். அதுவும் ராகு காலத்தில் தான் வாங்கி தர வேண்டும். தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைதோறும் நாம் இப்படி வாங்கி தருவதன் மூலம் அம்மனின் அருளால் விரைவிலேயே குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும் நிம்மதி உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே:மன அமைதிக்கு பௌர்ணமி வழிபாடு
எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலமே அந்த வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கும் பலன் கிடைக்கும். ஒருமுறை செய்துவிட்டு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று நம்பிக்கை இல்லாமல் செய்யாமல் முழு மனதுடன் தொடர்ச்சியாக அம்மனை நாம் வழிபாடு செய்ய விரைவிலேயே நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.