பிரச்சினைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய பக்குவத்தை இறைவன் நமக்கு அருளும் பட்சத்தில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனையிலிருந்து நம்மால் வெளியே வர முடியும். ஒரு வேளை நம்மால் அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்னும் பட்சத்தில் மனிதர்களை நம்பாமல் தெய்வத்திடம் முறையிட்டு வழிபாடு செய்தோம் என்றால் அந்த பிரச்சினைக்குரிய தீர்வை தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு காட்டுவார். அப்படி நம்முடைய தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க விநாயகப் பெருமானுக்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்
கேது பகவானுக்கு அதிதேவதியாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். கேது பகவான் என்பவர் ஞான காரணக்காரனாக திகழக்கூடியவர் என்றும் நாம் அறிவோம். அப்படிப்பட்ட கேது பகவானுக்குரிய ஒரு நட்சத்திரமாக மூல நட்சத்திரம் திகழ்கிறது. இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மூல நட்சத்திர நாளன்று விநாயகப் பெருமானுக்கு நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர்வதோடு ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
அப்படிப்பட்ட மூல நட்சத்திரம் என்பது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மாலை 3:23 க்கு தொடங்கி பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாலை 4 :30 வரை இருக்கிறது. அதனால் நாம் இந்த வழிபாட்டை பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று செய்வது சிறப்பு ஏனென்றால் அது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்னும் பட்சத்தில் இதற்கு அதீத சக்தி கிடைக்கும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு விநாயகப் பெருமானுக்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை அங்கேயே அமர்ந்து கூற வேண்டும்.
தங்களால் இயலும் பட்சத்தில் விநாயகப் பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்கள், அருகம்புல் மாலை போன்றவற்றை வாங்கித் தரலாம். ஒரே ஒரு அச்சு வெல்லத்தை மட்டுமாவது விநாயகர் பெருமாளுக்கு முன்பாக நெய்வேத்தியமாக வைக்கலாம். ஒருவேளை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே இதே முறையில் நாம் வழிபாடு செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு முன்பாக மூன்று தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து விநாயகப் பெருமானிடம் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று வழிபாடு செய்யலாம். இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
“ஓம் விக்ன விநாயகா பாதம் போற்றி”
இதையும் படிக்கலாமே:விதி மாற போவதன் அறிகுறிகள்
மிகவும் எளிமையான அதே சமயம் அதீத சக்தி வாய்ந்த இந்த குறிப்பிட்ட நாளில் விநாயகர் பெருமானுக்கு ஏற்றக்கூடிய தீபமானது நம்முடைய வாழ்நாளில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.