இந்த ஒரு செடியை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தாலே போதும். துர் தேவதைகளிடமிருந்தும், கண்ணுக்குத் தெரியாத கெடுதலிருந்தும் உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.

sivan1

நாம் செய்யும் எந்த ஒரு செயலின் மூலமாகவும், நம் வீட்டிற்கு நல்லது கிடைக்கின்றதோ இல்லையோ? ஒரு துளி அளவு கூட நம் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் எந்த ஒரு கெடுதலும் நடந்து விடக்கூடாது. நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும், ஒன்றுக்கு பலமுறை யோசித்து, அந்த செயலை செய்வதுதான் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பரிகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, தாந்திரிக வழிகளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நன்மை கொடுக்கும் விஷயங்களை மட்டும் உங்கள் வீட்டில் பிரயோகப்படுத்தி பாருங்கள். இதன் மூலம் நமக்கு நன்மை நடக்குமா என்ற சந்தேகம் ஒரு சிறுதுளி வந்தால் கூட, அந்த பிரயோகத்தை நீங்கள் செய்ய வேண்டாம்.

நாம் எதை நம் மனதில் நினைத்துக்கொண்டு செய்கின்றோமோ, அதுதான் நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். சந்தேகத்தோடு செய்தால் நாம் செய்யும் பரிகாரத்திற்கு பலன் இல்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களது வீட்டில், கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் எந்த பிரச்சனையும் இருக்காது.

நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு நம் வீட்டில் வளர்க்க வேண்டிய செடி பிரண்டை. இது ஒரு மூலிகை செடியும் கூட. உடல் ஆரோக்கியத்திற்கு நம் உணவில் இந்த பிரண்டையை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. அனேகமாக எல்லோருக்கும் பிரண்டை செடி என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும். ஆன்மீக ரீதியாகவும் இந்த மூலிகைச் செடிக்கு நல்ல மகத்துவம் உண்டு.

pirandai

உங்களுடைய வீட்டில் இந்த செடியை வைத்து வளர்த்து அதிலிருந்து பிரண்டையை எடுத்து பரிகாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அல்லது கடையில் இருந்து வாங்கி வந்த பிரண்டையை பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி அது உங்களுடைய இஷ்டம்தான்.

- Advertisement -

ஆனால் பிரண்டையை நம் வீட்டில் வளர்த்து வந்தால், நம்முடைய வீட்டிற்குள் எந்த ஒரு காத்து கருப்பும் துர்தேவதைகளும் அண்டாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, உங்கள் பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த பிரசாதத்தை இறைவனுக்கு வைக்க வேண்டும். 2 வாழைப்பழத்தை படைத்தால் கூட போதுமானது.

poojai

அதன் பின்பு உங்களது இரண்டு கைகளிலும், இரண்டு பிரண்டையை வைத்துக் கொண்டு,(ஒரு கையில் ஒரு பிரண்டை) முதலில் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, அதன் பின்பு சிவபெருமானை மனதார வணங்கி உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைக்கவேண்டும். அடுத்தபடியாக, ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

shivan

அதற்கு அடுத்தபடியாக, ‘ஓம் சத்ரு வசிய சிவாய வசி சுவாகா’ இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு உங்கள் கையில் இருக்கும் பிரண்டையை பூஜை அறையில் வைத்துவிட்டு தீப தூப ஆராதனை காட்டி, உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். பிரண்டையை ஒரு தட்டில் மேல் வைக்கவேண்டும். தரையில் வைத்து விடாதீர்கள்.

pirandai thogaiyal

காலையில் இந்த பூஜையை முடித்துவிட்டு, மதியம் இந்த பிரண்டையை துவையல் செய்து நீங்கள் உங்களுடைய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜையை செய்யும் அந்த நபர் மட்டும் தான் இந்த பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு இதை சாப்பிடக் கொடுக்கக் கூடாது. உங்கள் வீட்டிற்கு வேறு யாராவது விருந்தினர்கள் வருகை தந்தாலும் அவர்களுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.

pirandai 2

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை பொறுத்து, இந்த பரிகாரத்தை 11 நாள் அல்லது 21 நாள் இப்படியாக தொடர்ந்து செய்து வரலாம். எதிரிகளின் மூலம் உங்களுக்கு தெரியாமல், உங்களுடைய வயிற்றில் ஏதேனும் கெடுதல் இருந்தாலும் அது மலத்தின் மூலம் வெளியேற்றப் பட்டுவிடும். உங்களுடைய வீட்டில் ஏதேனும் கெடுதல் இருந்தாலும் நீங்கள் செய்யும் இந்த பூஜையின் மூலம் நீங்கள் உச்சரிக்கும் இந்த மந்திரத்தின் மூலம் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வெளியேறிவிடும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலன் அடையலாம்.

இதையும் படிக்கலாமே
அடடா! இத்தனை நாளா இத தெரிஞ்சி வெச்சுக்காம, சமைச்ச பொருள் எல்லாத்தையும் வீணாக்கிட்டோமே! சுவாரசியமான 5 சமையலறை டிப்ஸ்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.