அடடா! இத்தனை நாளா இத தெரிஞ்சி வெச்சுக்காம, சமைச்ச பொருள் எல்லாத்தையும் வீணாக்கிட்டோமே! சுவாரசியமான 5 சமையலறை டிப்ஸ்.

tip6
- Advertisement -

Tip No 1:
வடித்த சாதம் மீதம் ஆகிவிட்டால், சிலர் அந்த பழைய ஆறிய சாதத்தை வீணாக்காமல் அப்படியே சாப்பிடுவார்கள். சிலர் சாதத்தை சாப்பிடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தோ அல்லது அப்படியே எடுத்து குப்பையில் போட்டு விடுவார்கள். சாதத்தை வீணடிக்கக் கூடாது.  மதியம் வைத்த சாதமாக இருந்தாலும் சரி, இரவு வைத்த சாதமாக இருந்தாலும் சரி, ஆறிய சாதத்தை, திரும்பவும் புதுசாக வடித்த சாதம் போல் மாற்ற முடியும். உங்க வீட்டில் பிரஷர் குக்கருக்கு உள்ள கொஞ்சம் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தவும்.

rice

அடுத்தபடியாக, ஒரு சிறிய டிபன் பாக்ஸில் மீதமான சாதத்தை போட்டு மூடி போட்டு, அந்த தண்ணீரில் வைத்து விடுங்கள். டபுள் பாய்லின் மெத்தட். மேலே பிரஷர் குக்கர் மூடியை மூடி, விசில் எல்லாம் போட வேண்டாம். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டால் பழைய சாதம் புதுசாதமாக மாறிவிடும்.

- Advertisement -

இரவு மிஞ்சிய சாதத்தை பிரிட்ஜில் வைத்து மறுநாள் மதியம் கூட இப்படி சூடுபடுத்தி சாப்பிடலாம். சாதம் நன்றாகத்தான் இருக்கும். அப்படி இல்லை என்றால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து விட்டு, சாதத்தையும் நேரடியாக கொதிக்கிற தண்ணீரில் போட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து எப்போதும் போல சாதத்தை வடித்து சாப்பிடலாம்.

Sambar Recipe in Tamil

Tip No 2:
சில சமயங்களில் நாம் குழம்பு வைக்கும் போது அதில் உப்பு புளிப்பு காரம் இப்படிப்பட்ட சுவைகள் அதிகமாகிவிடும். சில சமயங்களில் குழம்பை வாயில் ஊற்ற முடியாது. நீங்கள் வைத்த சாம்பாரில் உப்பு புளிப்பு அதிகமாகி விட்டால் அல்லது வெறும் புளிப்பு அதிகம் ஆகி விட்டாலும் சரி, கொஞ்சமாக வெல்லத்தை சாம்பாரில் சேர்த்து விடுங்கள். ஐந்து பேருக்கு தேவையான சாம்பார் என்றால் 1 டேபிள்ஸ்பூன் அளவு வெல்லத்தை தாராளமாக சாம்பாரில் சேர்க்கலாம்.

- Advertisement -

சாம்பாரை இறக்குவதற்கு முன்பாக ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்யை சாம்பாரில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு அடுப்பை அணைத்தால் சாம்பாரின் சுவை மேலும் அதிகரிக்கும். இனி பக்குவம் தவறிய சாம்பார் குழம்பை கீழே கொட்ட வேண்டாம். புளிக் குழம்பில் உப்பு காரம் அதிகமாகிவிட்டால் பச்சை உருளைக்கிழங்கை வெட்டி தோல் சீவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்களில் இந்த உருளைக்கிழங்கு உப்பு புளி காரத்தை உருஞ்சி இருக்கும்.

egg

Tip No 3:
நிறைய பேருக்கு முட்டையை சரியாக அவிக்க தெரியாது. முட்டையை தண்ணீரில் போட்டு வேக வைக்கும் போது அந்த முட்டையின் ஓடு உடைந்து உள்ளே இருக்கும் கரு வெளியே வந்துவிடும். அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு முட்டையை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

oil pulling

முதலில் கடாயில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு விட்டு, இந்த தண்ணீரில் முட்டையை போட்டு வேக வைத்து பாருங்கள் முட்டை உடையாமல் முழுசாக வெந்து கிடைக்கும்.

hot-water

Tip No 4:
உங்களுக்கு பூண்டு உரிக்கவே சோம்பேரித்தனமா இருக்குமா? பூண்டு உரிக்க கஷ்டப்படுறீங்களா? முதலில் முழு பூண்டை தனித்தனி பற்களாக உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருக்கும் மெல்லிய தோல் நமக்கு தேவையில்லை. வெரும் பூண்டு பல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சூடாக இருக்கும் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். கொதிக்க கொதிக்க தண்ணீர் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கை பொறுக்கும் சூடு தேவை.

Garlic poondu

இப்ப பூண்டே பற்களை இந்த சுடு தண்ணீரில் போட்டு, மூன்று நிமிடங்கள் கழித்து அதன் பின்பு எடுத்து உரித்து பாருங்கள். பூண்டில் இருந்து தோல் சுலபமாக பிரிந்து வந்துவிடும். பூண்டு சுடு தண்ணீரில் வெந்து போகும் என்ற பயம் கிடையாது. பூண்டில் இருக்கும் சத்தும் அந்த தண்ணீரில் வீணாகப் போகாது. இந்த உரித்த பூண்டை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

tea-making

Tip No 5:
நம்மளோட பதிவில லாஸ்ட்டா போடும் டிப்ஸ் எப்போதுமே சூப்பர் டிப்ஸ் தான். இன்னைக்கும் ஒரு சூப்பரான சுவாரஸ்யமான டிப்பை  தான் தெரிஞ்சுக்க போறோம். உங்க வீட்ல டீ போடுற பழக்கம் இருக்கா? 250 கிராம் டீ தூளில், 1 ஸ்பூன் காஃபி பவுடரை கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த காப்பித்தூள் கலந்த டீ பவுடரை வைத்து, ஒரே ஒரு வாட்டி டீ போட்டு பாருங்கள். இதோட டேஸ்டும் வாசமும் சூப்பரா இருக்கும்.

tea-powder

உங்களால நம்ப முடியலையா! காபி போட்ட டம்ளர்ள டீ ஆத்தி குடிச்சாலே சுவை அதிகமாக இருக்கும். அதாவது காபி ஆத்திய டம்ளரில் அடியில் கொஞ்சம் காபி இருக்கும் அல்லவா? அந்த காபியோட ஒரு டம்ளர் டீ ஆத்தி குடித்து பார்த்தால் சுவை அதிகமாக இருக்கும். ஒரு ஸ்பூன் டீ தூளில், ஒரு சிட்டிகை காப்பி பவுடரை போட்டு கலந்து நீங்க ட்ரை பண்ணிப் பார்த்துட்டு, அப்புறமா மொத்த டீ தூளிளேயும், ஒரு ஸ்பூன் காபி தூளை கலந்து கொள்ளுங்கள். நல்லா இருந்தா ஃபாலோ பண்ணிக்கோங்க!

இதையும் படிக்கலாமே
இட்லி தோசை மாவு உங்க வீட்ல இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான, சுவையான, சுலபமான, ஆரோக்கியமான இந்த தோசையை 5 நிமிடத்தில் சுட்டு விடலாமே.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -