- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇதுவரை என்ன செய்தும் ஒன்று சேராத கணவன் மனைவி கூட, இந்த பொருளை சேர்த்து வைத்தால்...

இதுவரை என்ன செய்தும் ஒன்று சேராத கணவன் மனைவி கூட, இந்த பொருளை சேர்த்து வைத்தால் சேர்ந்து விடுவார்கள். பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க இதை விட எளிய பரிகாரம் இல்லை.

- Advertisement -

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் ஆத்மார்த்தமான உறவு. ஒன்று வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத ஒரு நெருக்கம், புரிதல், அன்பு, பாசம் என அனைத்து உணர்வுகளையும் ஒரே இடத்தில் செலுத்த முடியும் என்றால் அது இந்த கணவன் மனைவி உறவிற்குள் தான். அந்த உறவில் பிளவு ஏற்பட்டால் அதன் பிறகு அந்த குடும்பம் தழைத்து வாழ்வது என்பதே முடியாது. இந்த பிரிவின் பாதிப்பு ஆண், பெண் இருவருக்குமே சமமானது தான். அப்படி பிரிந்த உறவு மீண்டும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ மிகவும் எளிமையான பரிகார வழிகள் ஆன்மிகத்தில் உண்டு. அது என்ன வென்று இந்த பதிவை தெரிந்து கொள்வோம்.

ஆண் பெண் இருவருமே திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையும் போது ஆசையுடன் தான் தொடங்குவார்கள். நாளடைவில் சின்ன சின்ன காரணங்களுக்காகவும், விட்டுக் கொடுக்காமல்,மூன்றாவது நபர் சொல்லும் பேச்சைக் கேட்கும் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இந்த உறவின் மைய புள்ளியே புரிதலும் விட்டுக் கொடுத்தலும் தான். அதை தான் நம் பெரியவர்கள் அழகாக சொல்லி வைத்தார்கள். விட்டு கொடுப்பவர் வாழ்க்கையில் என்றும் கெட்டு போவதில்லை. இதை புரிந்து கொண்டாலே உறவுக்குள் பிரிவே இருக்காது.

- Advertisement -

பிரிந்த பல பேரின் கதைகளை கேட்டால் ஏதோ ஒரு சிறிய காரணமாக தான் இருக்கும். இதில் விட்டுக் கொடுப்பது யார் என்று ஈகோவே பெரும்பாலும் பிரிந்த உறவுகள் மீண்டும் சேராமல் இருக்க காரணம். இப்படி சூழ்நிலையால் பிரிந்தவர்கள் மீண்டும் சேர இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள் நிச்சயம் உங்களை பிரிந்த உறவு உங்களிடம் வந்து சேரும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருள் மட்டும் தேவை. அது வேப்பங்குச்சி, அரசங்குச்சி,மஞ்சள் நூல். இந்த குச்சிகளை சம அளவில் இருப்பதை போல எடுத்துக் கொள்ளுங்கள். இது சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் இந்த இரண்டு குச்சியையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு குச்சிகளையும் வாங்கி வந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து இந்த குச்சிகளை மஞ்சள் கலந்த நீரில் சுத்தம் செய்த பிறகு, மஞ்சள் நூலால் இந்த குச்சிகளை சேர்த்து கட்ட வேண்டும். கட்டும் போது, அரஞ்குச்சியை ஆணாகவும், வேப்பம் குச்சியை பெண்ணாகவும் பாவித்து, எந்த உறவுகள் சேர வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்கள் பெயரை மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கட்ட வேண்டும். இப்படி கட்டிய இந்த குச்சி உங்கள் பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள் போதும். நீங்கள் பூஜை செய்யும் போதெல்லாம் இதற்கும் தீபம் காட்டி வேண்டிக் கொள்ளுங்கள். பிரிந்த உறவுடன் சேர்ந்த பிறகு இதை நீர் நிலைகளில் விட்டுவிடலாம்.

இந்த பரிகாரத்தைப் பிரிந்த கணவன் மனைவி யார் வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது அவர்களின் உறவின் நண்பர் என்று இப்படி யார் வேண்டுமானாலும் செய்யலாம் யாருக்காக செய்கிறோமோ அவர்கள் பெயரைச் சொல்லி அந்த குச்சியை கட்ட வேண்டும் அது தான் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: மனதில் இருக்கும் ஆசைகள் தடையில்லாமல் அப்படியே நிறைவேற இப்படி இதுல 11 முறை எழுதி வச்சாலே போதுமே! குறையோடு இருப்பவர்களுக்கு நிறைவு தரும் எளிய பரிகாரமா?

இந்த பரிகாரம் செய்யும் போது உங்களை பிரிந்த உறவுடன் ஒன்று சேர நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்குங்கள் நிச்சயமாக உங்களை பிரிந்த உறவு உங்களை தேடி வர வைக்கும்.

சற்று முன்