அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அனைத்திலும் சிறக்க இக்கோயிலில் வழிபட வேண்டும்

marundeeswarar-sivan-temple
- Advertisement -

நம்மால் ஒரு காரியம் செய்ய முடியும் என்பது நம்பிக்கை. நம்மால் மட்டுமே ஒரு காரியத்தை செய்ய முடியும் என்பது நமது ஆணவத்தை காட்டுகிறது. சாமானிய மக்களிடம் அதிகம் காணப்பட்ட இந்த ஆணவம், அகங்காரம் அக்காலத்தில் முனிவர்களிடமும் அதிகம் இருந்தது. அந்த முனிவர்களின் கர்வம், ஆணவத்தை அடக்கிய திருத்துறைப்பூண்டி அருள்மிகு “பிறவி மருந்தீஸ்வரர் கோயில்” சிறப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

Siva Lingam

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது பிறவி மருந்தீஸ்வரர் கோயில் இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் பிறவி மருந்தீஸ்வரர் என்றும், அம்பாள் பெரியநாயகி என்றும் வழிபடப்படுகிறார்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.

- Advertisement -

புராணங்கள் படி அரக்கர் குலத்தில் பிறந்த ஜல்லிகை என்ற பெண் சிறந்த சிவபக்தையாக இருந்தாள். அவளுக்கு மனிதர்களை சாப்பிடும் விருபாட்சன் என்கிற ராட்சதன் கணவனாக அமைந்தான். ஒரு முறை அந்தண சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிராத்தம் செய்ய கங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். அந்த அந்தண சிறுவனை சாப்பிட விருபாட்சன் முயற்சித்த போது, அந்தணர்களை கொல்வது மிகவும் பாவமான செயல் என கூறி ஜல்லிகை தன் கணவன் விருபாட்சனை தடுத்தாள். ஆனால் அவளின் பேச்சை கேட்காத விருபாட்சன் அந்த அந்தண சிறுவனை கொன்று, சாப்பிட்டான். அச்சிறுவனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே விஷமேறி இறந்தான் விருபாட்சன்.

shiva-parvati

இதை கண்ட ஜல்லிகை தனது கணவன் கொடூரமான ராட்சதன் என்றாலும் அவரின்றி நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றும், இனி உலகில் அரக்க குணம் இல்லாத மனிதர்களை பிறக்க செய்ய வேண்டும் என அம்பாளிடம் வேண்டினாள். இதை கேட்ட பெரியநாயகி ஜல்லிகையின் சிறந்த பதிபக்தியை போற்றி இறந்த அவள் கணவன் விருபாட்சனை உயிர்ப்பித்ததோடு, அவன் கொன்று சாப்பிட்ட அந்தண சிறுவனையும் உயிர்பித்தாள். தனது விதி முடிந்த பிறகு மீண்டும் தனக்கு உயிர் தந்ததற்கான காரணத்தை அச்சிறுவன் அம்பாளிடம் கேட்க, தந்தை இறந்த பிறகும் அவருக்கு வருடந்தோறும் சிராத்தம் அளிக்கும் மகன் எனது அருளை பெறுகிறான் என்று கூறி ஜல்லிகை மற்றும் அந்தண சிறுவனுக்கு அருளாசி கூறி மறைந்தாள்.

- Advertisement -

மமதை கொண்ட சில முனிவர்கள் தங்களை சிவபெருமானும், திருமாலும் அவமானப்படுத்தியதாக கருதி அவர்களை அழிக்க, யாகம் செய்து அதிலிருந்து மிகப்பெரும் ஒரு யானை வரவழைத்து அதை சிவன் பெருமாள் மீது ஏவினர். சிவபெருமான் அந்த யானையை கொன்று கஜசம்ஹார மூர்த்தி என்கிற பெயரை பெற்றார்.

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

- Advertisement -

இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கிய திசையில் இருப்பதும், இங்கு சிவனின் கஜசம்ஹார மூர்த்தி இருப்பதும் இக்கோயிலின் விசேஷ அம்சங்களாகும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் திருமண தடை மற்றும் தாமதங்கள் நீங்கவும், கல்வி பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் வந்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.

aswini devathas

இத்தலத்தில் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் வந்து தன்வந்திரி ஹோமம் போன்றவற்றை செய்து கொள்வதால் நோய் நொடிகள் இல்லாத வாழ்வை பெறலாம்.அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த சிவனை வழிபடுபவர்களுக்கு பயம் என்பதே இல்லாமல் போகும். நமது ஆணவத்தை வேரறுப்பார் கஜசம்ஹார மூர்த்தி.

கோயில் அமைவிடம்

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் திருத்துறைபூண்டியில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
திருத்துறைபூண்டி
திருவாரூர் மாவட்டம் – 614713

தொலைபேசி எண்

9944223644

இதையும் படிக்கலாமே:
எட்டுமானூர் மகாதேவர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Piravi marundeeswarar temple details in Tamil. It is also called as Marundeeswarar temple thiruthuraipoondi in Tamil or Thiruthuraipoondi marundeeswarar kovil in Tamil or Ashwini natchathiram kovil in Tamil or Piravi marundeeswarar thirukoil in Tamil.

- Advertisement -