கணவரை விட்டு பிரிந்து இருக்கும் மனைவி, மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ இதை மட்டும் செய்தாலே போதும். நிச்சயம் நீங்கள் உங்களுடைய கணவரோடு மீண்டும் சேருவது உறுதி.

amman

நீங்கள் கருத்து வேறுபாடு வந்து உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களது கணவர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கு உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளதா? ஆன்மீக ரீதியாக தொடர்ந்து நீங்கள் இந்த வழிபாட்டு முறையை மட்டும் செய்து வாருங்கள் போதும். வேறு எதுவுமே தேவை கிடையாது. உங்களுடைய மன உறுதியே உங்களை, உங்கள் கணவரிடம் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

இன்றைக்கு நீங்கள் உங்களது கணவரோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். எதிர்காலத்தில் எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது. எதிர்காலத்தில், ஆயுசுக்கும் நீங்கள் உங்கள் கணவருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து பின்பற்றலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.

பெண்கள் மஞ்சள் குங்குமத்தோடு தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றாலே அதற்கு அம்மன் வழிபாடு தான் சிறந்தது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினம், பௌர்ணமி தினம், திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இந்த 5 நாட்களிலும் தொடர்ந்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வரும் பழக்கத்தை நீங்கள் வைத்து வர வேண்டும். அதாவது பெண்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

irukkankudi-amman

கோவிலுக்கு செல்லும் போது மஞ்சள் குங்குமத்தை அம்மன் கோவில்களுக்கு தானமாக வாங்கி தர வேண்டும். உங்கள் மஞ்சள் குங்குமம் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணி, அந்த மஞ்சள் குங்குமத்தை நீங்கள் கோவிலுக்கு தானம் கொடுங்கள். அதை அவர்கள் அம்மனின் திரு மாங்கல்யத்திற்கு வைக்க நிச்சயமாக பயன்படுத்துவார்கள். இது உங்களது மாங்கல்யத்தை வலுப்படுத்த ஒரு நல்ல வழி.

- Advertisement -

அடுத்தபடியாக அம்மன் கோவில்கள் என்றாலே நிச்சயமாக பிரசாதமாக மஞ்சள் குங்குமம் கிடைக்கும். அதை வாங்கி அம்மனின் சன்னிதானத்திலேயே உங்களது திருமாங்கல்யத்தில் இட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும். குங்குமத்தை இட்டுக் கொள்ளும் போது, உங்களது கணவர் ஆயுசுக்கும் உங்களுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வேண்டி கொள்ளுங்கள். விடாமல் இந்த வழிபாட்டை செய்து வந்தாலே உங்களது கணவர், உங்களிடம் வந்து சேரும் பாக்கியம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

wedding

ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களுடைய கணவர் உங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அந்த எண்ணம் சில நாட்களில் மாரி, அவரே மனதார உங்களை தேடி வருவார் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இதோடு சேர்த்து விடாப்பிடியான பிடிவாதம், தேவையற்ற வாக்குவாதம் இவைகளை பெண்கள் நிரந்தரமாக தங்களுடைய மனதிலிருந்து நீக்கிவிடவேண்டும். விட்டுக்கொடுத்து செல்லும் பட்சத்தில் உங்களது இல்லற வாழ்க்கை நிச்சயம் சுபிட்சமாக அமையும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க நகத்தில் இது இருக்கான்னு பாருங்க! சீக்கிரமே இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். மூட நம்பிக்கையும், அதில் ஒளிந்துள்ள அதிர்ஷ்ட யோகங்களும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.