- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரிந்த உறவுகள் ஒன்று சேர பரிகாரம்

பிரிந்த உறவுகள் ஒன்று சேர பரிகாரம்

- Advertisement -

நிறைய வீடுகளில் சொந்த பந்தங்களோடு பிரச்சனை இருக்கும். ஒரே வீட்டிலே தான் வாழ்வார்கள். ஆனால் அப்பா மகன் பேசிக்கொள்ள மாட்டார்கள். மாமியார் மருமகள் பேசிக் கொள்ள மாட்டார்கள் சில வீடுகளில் கணவன் மனைவி கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். இப்படி உங்களுடைய குடும்பத்திலும் உறவுகளுக்குள் பிரச்சனை இருக்கிறதா.

அந்த உறவுகளை ஒன்று சேர்க்க இந்த பரிகாரத்தை செய்யலாம். இரண்டு குடும்பமே தனித்தனியாக பிரிந்து கொண்டு வாழ்கிறது. அந்த இரண்டு குடும்பங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கப் போகும் சக்தி வாய்ந்த அந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அம்மாவாசை அடுத்து வரக்கூடிய நாளிலிருந்து இந்த பரிகாரத்தை தொடங்கி விட வேண்டும். அமாவாசைக்கு பிறகு வளர்பிறை. அந்த சந்திர பகவானை நினைத்து இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். வளர்பிறையில் இந்த வழிபாட்டை செய்தால், உங்கள் குடும்பம் வளமாகும். தினமும் மாலை 6:30  மணிக்கு மேலாக சந்திரன் உதயமாகும். முதல் 3 நாட்கள் சந்திர பகவான் கண்ணுக்கு தெரிய மாட்டார். இருந்தாலும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

வெட்ட வெளியான இடத்தில் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதற்கு பக்கத்தில் 1 டம்ளர் பால் நெய்வேதியமாக வைத்து விடுங்கள். சர்க்கரை போட்ட பால், நெய் வைத்தியமாக வைக்க வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்தில் அமர்ந்து, 2 நிமிடம் கண்களை மூடி, சந்திர பகவானே அமாவாசை திதியிலிருந்து நிலவு வளர்ந்து, எப்படி முழு நிலவாக பிரகாசமாக ஜொலிக்கின்றாதோ, அதேபோல எங்களுடைய குடும்பமும் ஒன்று சேர்ந்து முழு நிலவு போல பிரகாசமாக ஜொலிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அந்த பாலை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்கள் பருகலாம். விளக்கு தானாக எரிந்து குளிரட்டும்.

- Advertisement -

தொடர்ந்து வளர்பிறையில் 15 நாள் பௌர்ணமி நாள் வரும் வரை இந்த வழிபாட்டை மேற்கொண்டு, சந்திர பகவானே வழிபாடு செய்தால், பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வெட்ட வெளியில் எங்களுக்கு இடமில்லை. நாங்கள் ஃபிளாட்டில் இருக்கின்றோம் என்றால் பால்கனியில் ஏற்றலாம். எதுவுமே முடியாது என்றால் நிலை வாசலில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சந்திர பகவானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் 15 நாட்களில் பிரிந்த உறவு ஒன்று சேரும் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற பொட்டு வழிபாடு

பெண்களுக்கு இடையே மாதவிடாய் நாட்கள் வந்து விட்டால் அந்த நாளில் என்ன செய்வது. பூஜை அறையை தொடாமல் வெளியிலேயே கொஞ்சம் நெய் திரி வைத்துக் கொள்ளுங்கள் அதைப்போட்டு இந்த தீபத்தை ஏற்றலாம். தவறு கிடையாது. 15 நாட்கள் இடைவிடாமல் ஏற்றுவதன் மூலமே நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த பரிகாரத்தை செய்யுங்கள். மனதிற்கு பிடித்த உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள்.

சற்று முன்