- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பித்தளை பொருட்கள் பளபளக்க

பித்தளை பொருட்கள் பளபளக்க

- Advertisement -

நம் வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பூஜை பொருட்கள் பெரும்பாலும் பித்தளையாகத் தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்ற பல்வேறு பித்தளை சாமான்களையும் பளபளவென்று தங்கம் முலாம் பூசியது போல ஜொலிக்க செய்வதற்கு வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதுமானது. பத்து நாள் ஆனாலும் நிறம் மாறாமல் பூஜை பொருட்களும், பித்தளை பொருட்களும் சுத்தமாக இருக்க என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜை பொருட்கள் புதிதாக வாங்கும் பொழுது பளபளவென்று தங்க முலாம் பூசியது போல மின்னும். ஆனால் நாட்பட நாட்பட அதன் பளபளப்பு குறைந்து போய் கறுத்துப் போக ஆரம்பிக்கும். அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். எண்ணெய் பிசுக்குகள் சேர்ந்து விட்டால் அவ்வளவுதான், அதை தேய்ப்பதற்குள் பாடாய்ப்பட வேண்டி இருக்கும். பூஜை பித்தளை பொருட்கள் அனைத்தும் சுத்தமாக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு கை கூட வலிக்காது, அவ்வளவு சூப்பராக புதிது போல ஜொலிக்கும்.

- Advertisement -

முதலில் பூஜை பொருட்களில் இருக்கக் கூடிய எண்ணெய் பிசுக்குகள் மற்றும் சந்தன, குங்குமம் பொட்டுகளை ஒரு நியூஸ் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி சுத்தமாக துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தட்டில் பீதாம்பரி அல்லது சபீனா சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லோருடைய கைகளுக்கும் பீதாம்பரி ஏற்றதாக இருக்காது. சிலருடைய நகங்கள் மற்றும் கைகளில் ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இவர்கள் சபீனாவை பயன்படுத்துங்கள். மற்றவர்கள் பீதாம்பரியை தாராளமாக பயன்படுத்தலாம்.

அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா எனப்படுவது சமையலுக்கு நாம் பயன்படுத்தும் சோடா உப்பு தான். சோடா உப்பு சேர்த்ததும் அரை மூடி எலுமிச்சைச் சாறை பிழிந்து விடுங்கள். எலுமிச்சை சாறு சேர்த்ததும் நுரைக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் ஒரு ஸ்க்ரப்பர் அல்லது கைகளாலேயே எடுத்து பூஜை பொருட்களை லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும், அவ்வளவு பளபளப்பாக பளிச்சென மாறிவிடும்.

- Advertisement -

பூஜை பொருட்கள் தேய்ப்பதற்கு தனியாக ஸ்க்ரப்பர் பயன்படுத்துங்கள். கைகளில் தேய்த்தால் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். ஸ்க்ரப்பர் பயன்படுத்தி இந்த முறையில் நீங்கள் தேய்க்கும் பொழுது நுண்ணிய வேலைப்பாடுகள் இருக்கும் இடங்களில் கூட இது உள்ளே சென்று சுத்தம் செய்யும். ஒவ்வொரு பூஜை பொருட்களாக எடுத்து இது போல் சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அனைத்து தெய்வங்களையும் போற்றும் மந்திரம்.

சாதாரணமாக புளி போட்டு தேய்ப்பதை காட்டிலும், இது பல மடங்கு பளிச்சென்று புதிது போல ஜொலிக்க செய்யும். மேலும் நீண்ட நாட்களுக்கு கறுத்துப் போகாமலும் பாதுகாக்கும். சுத்தம் செய்த பூஜை பொருட்களை ஒரு முறை பன்னீர் கலந்த தண்ணீரில் போட்டு எடுத்து சுத்தமான துணியால் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இப்போது காய்ந்ததும் வழக்கம் போல நீங்கள் அதற்கு சந்தன, குங்கும பொட்டிட்டு அலங்கரித்து பூஜை செய்ய துவங்கினால் 10 நாட்களுக்கு பூஜை பொருட்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அவ்வளவு சுத்தமாக தங்கம் முலாம் பூசியது போல மின்னும்.

சற்று முன்