இது மட்டும் தெரிந்தால் இனி பித்தளை பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியமே இல்லையே! பித்தளையை சுத்தமாக்கும் அதிசய தண்ணீர்!

brass-pithalai-pooja-vessels
- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் பாத்திரங்களையும், படங்களையும் சுத்தம் செய்வதற்கு என்று தனியாக நமக்கு ஒரு நேரம் தேவை. பூஜை பித்தளை பாத்திரங்களை தேய்ப்பதற்கு என்றே பிரத்தியேகமாக சில பவுடர் வகைகளும் விற்பனைக்கு உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய கைகளுக்கும் அலர்ஜி உண்டாக வாய்ப்புகள் உண்டு. இயற்கையாகவே பூஜை பாத்திரங்களை புதியது போல மின்ன செய்ய இந்த தண்ணீரில் ஊற வைத்தால் மட்டுமே போதுமே! அது என்ன தண்ணீர்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

poojai

பூஜை பாத்திரங்களை பொதுவாக வாரம் ஒருமுறை தேய்த்து சுத்தம் செய்வது மிகவும் நல்லது. சோம்பல் பட்டு நாட்களைக் கடத்தினால் பின்னர் அதை தேய்ப்பதற்கு அதிக நேரம் செலவாகும். அப்படி சேர்ந்து இருக்கும் விடாப்பிடியான கரைகளையும் கூட இந்த தண்ணீரில் ஊற வைத்தால் போதும்! நீங்கள் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. பூஜை பித்தளை பாத்திரங்களை தேய்ப்பதற்கு பொதுவாக புளியை பயன்படுத்துவது உண்டு. அதையே தான் நாம் இப்பொழுது பயன்படுத்த இருக்கிறோம். ஆனால் அதில் இருக்கும் சூட்சமத்தை மட்டும் முதலில் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நமக்கு வேலையை சுலபமாக்க செய்யும் என்பது தான் கூற்று.

- Advertisement -

புளித் தண்ணீரை கொதிக்க வைத்து பேக்கிங் சோடா எல்லாம் போட்டு ஊற வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதே போல பீதாம்பரி போட்டு தேய்ப்பது, கோலமாவு போட்டு வைப்பது போன்ற பிரச்சினையும் இங்கு இல்லை. ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்துக் கொண்டு அதை அரை வாளி தண்ணீரில் நன்கு கரைத்து கொள்ளவும். பின்னர் பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய், திரி, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை நீக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு சபீனா போட்டு நன்கு பூஜை பாத்திரங்களை தேய்த்துக் கொள்ளுங்கள்.

pooja-vessels1

பித்தளை பூஜை பாத்திரங்களை அந்த புளி தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டு குறைந்தது அரை மணி நேரமாவது அப்படியே ஊற விட்டு விடுங்கள். புளித் தண்ணீரில் பித்தளை பாத்திரங்கள் சாதாரணமாக நன்கு ஊறினாலே போதும், அதன் மீது படிந்திருக்கும் கருமை நீங்கி புதிதாக வாங்கியது போல பளபளவென்று மின்ன ஆரம்பிக்கும். எனவே எல்லா இடங்களிலும் புளித் தண்ணீர் படும்படி மூழ்கி வைப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து ஒவ்வொன்றாக எடுத்து லேசாக சபீனா மற்றும் மீதமிருக்கும் புளி சக்கைகளை வாளியில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து தேய்த்து எடுத்தாலே போதும்! பளபளவென்று புத்தம் புதிதாக நாம் வாங்கிய பொழுது எப்படி இருந்ததோ! அதே போல பூஜை பொருட்கள் அத்தனையும் மின்ன ஆரம்பித்துவிடும். சபீனா மற்றும் புளி இந்த இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து இயற்கையாகவே நம் வீட்டு பூஜை பாத்திரங்களை, மற்ற பித்தளை பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

pooja-items

இதற்காக காசு கொடுத்து எந்த ஒரு பொடியையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பேக்கிங் சோடா போன்ற கரி உப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நிறைய பேர் இதே போல தான் தங்களுடைய பூஜை பித்தளைப் பாத்திரங்களில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பீர்கள்! ஆனால் தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு. புளியை அப்படியே பச்சையாக வைத்து தேய்ப்பதை விட, இப்படி புளித் தண்ணீரில் ஊற வைத்து பின் தேய்த்து எடுத்தால் மிக மிக சுலபமாக சிரமமின்றி பூஜை பாத்திரங்களை பளிச்சிட வைக்க முடியும் என்பது தான் இதில் இருக்கும் ரகசியம் ஆகும். நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -